Tap to Read ➤

காத்துவாக்குல ரெண்டு காதல் மினி ரிவ்யூ

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்த, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. படம் குறித்த மினி ரிவ்யூ.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை எழுதி இயக்கியுள்ளார் விக்னேஷ்சிவன். இது முக்கோண காதல் கதையா மூன்று பேரின் ஊடல் கதையா? ரசிகர்கள் தான் முடிவு செய்யவேண்டும்.
படத்தில் நயன்தாரா, சமந்தா இருந்தால் ஓடிவிடும், கூடுதலாக விஜய்சேதுபதி இருக்கிறார் என்கிற நம்பிக்கையில் விக்னேஷ் சிவன் படத்தை எடுத்துள்ளார்.
கதாநாயகன், இரண்டு நாயகிகள் இருவருமே ஹீரோ விஜய் சேதுபதியை விரும்புகிறார்கள். விஜய்சேதுபதிக்கு ராசியில்லா ராஜா ரோல். பிறந்த அன்றே தந்தை மரணம், தாய்க்கு ஸ்ட்ரோக் என கஷ்டப்படுகிறார்.
ஒரு கட்டத்தில் காற்று மாறி வீச ஆரம்பிக்கிறது. பகலில் நயன்தாரா, இரவில் சமந்தா கிடைக்கிறார். இருவரும் விஜய் சேதுபதியை காதலிக்கின்றனர். முதல்பாதி படம் காதலை வளர்ப்பதில் கொண்டுச் சென்றுள்ளார்.
சமந்தா, நயன்தாராவை அழகாக காட்ட முயற்சித்துள்ளார் இயக்குநர், அதை கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். காமெடி எதிர்பார்த்த அளவு இல்லை என்பது ரசிகர்கள் கருத்து.
முதல் பாதி மெதுவாக கொண்டுச் செல்கின்றனர், இரண்டாம் பாதி வேகமாக செல்வதாக ரசிகர்கள் கருத்து. காமெடிக்கு கிங்ஸ்லி காமெடி நன்றாக உள்ளதாக ரசிகர்கள் சொல்கின்றனர்.
முந்திரி, பாதாம், பிஸ்தா, உன்னை கல்யாணம் பண்ணிகிட்டான் போன்று சமந்தா பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் இளம் ரசிகர்களே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
இரண்டாம் பாதியில் ஞாபக மறதி நோயை வைத்து கதாநாயகிகள் இருவரிடமிருந்தும் விஜய் சேதுபதி தப்பிப்பதாக காட்சி அமைத்துள்ளார்கள்.
சமந்தா அழகாக இருக்கிறார், நயன்தாராவின் இளமை முடிவுக்கு வருகிறதா? என ரசிகர்கள் இந்த படம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளனர். இருவரில் யாருக்கு மார்க் என்றால் சமந்தாவுக்கு என்றே கூறுகின்றனர்.
அனிருத் இசை டூ டுட்டு டூ பாடலில் தான் இருப்பதை ஞாபகப்படுத்துகிறார். ஒரு தடவை பார்க்கலாம் என்கின்றனர்.
முடிவில் இரண்டு காதலிகளும் விஜய் சேதுபதியை மணந்தார்களா? அல்லது ஒருவர் மணந்தாரா? என்பதே கதையின் மீதி பாதி. கிளைமேக்ஸ் நன்றாக உள்ளதாக ரசிகர்கள் சொல்கிறார்கள்.