Tap to Read ➤

டாணாக்காரனில் கலக்கிய ஈஸ்வரமூர்த்தி எனும் லால்

டாணாக்காரன் படத்தில் ஈஸ்வரமூர்த்தி என்கிற வேடத்தில் பயிற்சியாளராக நடித்துள்ள மலையாள நடிகர் லால் பல படங்களில் நடித்திருந்தாலும் இந்தப்படம் அவரை தமிழ் ரசிகர்கள் முன் அடையாளம் காட்டியுள்ளது.
டாணாக்காரன் படத்தில் ஈஸ்வர மூர்த்தியாக வாழ்ந்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் லால்.
மைக்கேல் என்கிற பெயர் சினிமாவுக்காக லால் ஆக மாறியது. மலையாளப்பட உலகம் கண்டுபிடித்த திறமையான கலைஞர் லால்.
புகழ்பெற்ற கலாபவனில் மிமிக்ரி பயிற்சி எடுத்து தனது பால்ய நண்பர் சித்தீக்குடன் சேர்ந்து திரைத்துறைக்குள் நுழைந்தார்.
காதலுக்கு மரியாதை உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கிய ஃபாசிலிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்கள்.
சித்திக்-லால் இருவரும் இணைந்து கதைவசனம் இயக்கத்தில் பல படங்களை கொடுத்தனர். 1992 ஆம் ஆண்டு மோகன்லாலை வைத்து வியாட்னாம் காலனி என்கிற படத்தை இயக்கினர்.
தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த சித்திக் லால் ஜோடி பிரிந்தது. அதன் பின்னர் சித்திக் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ஹிட்லர் என்கிற படத்தை தயாரித்தார் லால்.
பின்னர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சுரேஷ்கோபி நடித்த களியாட்டம் படத்தில் முதன் முதலில் வில்லன் வேடத்தில் நடித்தார்.
தொடர்ந்து நடித்து வந்த அவர் 2009 ஆம் ஆண்டு மீண்டும் 2 ஹரி நகர் என்கிற படத்தை இயக்கினார்.
2012 ஆம் ஆண்டு ஒழிமொரி என்கிற படத்தில் நடித்ததற்காக நேஷனல் ஃபிலிம் விருதும் சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதுகளை இருமுறையும் பெற்றுள்ளார்.
தமிழில் 2004 ஆம் ஆண்டு எங்கள் அண்ணா படத்திலும், 2005 ஆம் ஆண்டு சண்டக்கோழி படத்திலும் நடித்தார்.
தொடர்ந்து ஆழ்வார், மருதமலை, சண்டைக்கோழி 2, கர்ணன், டாணாக்காரன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
சுல்தான், கர்ணன் படங்களும், டாணாக்காரன் படமும் தமிழ் ரசிகர்களுக்கு லாலை அடையாளம் காட்டின. கர்ணனில் தனுஷின் மாமாவாக சிறப்பாக நடித்திருப்பார்.
அதேபோல் டாணாக்காரன் படத்தில் கொடூரமான பயிற்சியாளராக ஈஸ்வரமூர்த்தி என்கிற ரோலில் வாழ்ந்திருப்பார்.
ஈஸ்வர மூர்த்தியை பார்க்கும் ஒவ்வொரு போலீஸாரும் தங்களுடைய பயிற்சி காலத்தில் பயிற்சியாளரை பார்த்த சிந்தனை வருவதாக கூறுகின்றனர்.
லாலின் மகன் ஜீன் லாலும் சினிமா இயக்குநராக உள்ளார். சமீபத்தில் அவருக்கு திருமணமானது.