Tap to Read ➤

5 வருடத்திற்கு பின் மீண்டும் இயக்குனரான ஐஸ்வர்யா, கௌரவ வேடத்தில் ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா லால் சலாம் என்னும் படத்தினை இயக்கவிருக்கிறார், இதன் மூலம் நீண்ட இடைவேளைக்கு பின் இவர் மீண்டும் இயக்குனர் ஆகியுள்ளார். முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தமிழ் சினிமாவில் '3' படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர்.
ஐஸ்வர்யா நடிகர் ரஜினியின் மகள் மற்றும் நடிகர் தனுஷின் மனைவியும் ஆவார். இவரது இயக்கத்தில் இதுவரை 3 மற்றும் வை ராஜா வை என இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது.
5 வருடங்களுக்கு பின் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் என்னும் திரைப்படம் உருவாகவுள்ளது.
லால் சலாம் திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
லால் சலாம் படத்தினை லைக்கா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.
லால் சலாம் படத்தின் நடிகர் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கவுள்ளார்.
லால் சலாம் படத்தின் பூஜை இன்று (2022 - நவம்பர் -5)ல் சென்னையில் நடந்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று படக்குழு சார்பில் இணையத்தில் வெளியானது
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
Swipe Up