Tap to Read ➤

லெஜண்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்

லெஜண்ட் பட ஃபர்ஸ் சிங்கிள் ரஜினி, விஜய் பட பாணியில் கலர்ஃபுல்லான பாடல் காட்சியாக வித விதமான காஸ்ட்யூமில் கலக்கியுள்ளார். பாடல் முழுவதும் இளமை துள்ளுகிறது.
புகழ்பெற்ற சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் செல்வரத்தினத்தின் மகன் சரவணன் அருள். இவர் சரவணா செல்வரத்தினம் என்கிற பெயரில் ஷோரூம்களை நடத்தி வருகிறார்.
தனது கடை விளம்பரங்களை வித்தியாசமாக கொடுக்க தானே அதில் நடிக்க ஆரம்பித்தார் அருள் அண்ணாச்சி. இது பரபரப்பாக வரவேற்கப்பட்டது.
நடிகைகள் ஹன்சிகா, தமன்னாவுடன் இணைந்து சினிமா பட பாணியில் வெளிவந்த இவரது விளம்பரங்கள் ட்ரால் செய்யப்பட்டாலும் ரசிக்கப்பட்டது.
இதனால் தானே ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பது என முடிவெடுத்தார். அதில் நயன்தாரா நடிக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் அருள் அதை மறுத்தார்.
படத்தை இரட்டையர்கள் ஜேடி ஜெர்ரி இயக்க வித்யா சாகர் இசையமைக்க கொரோனாவுக்கு முன்னரே படம் தொடங்கியது. ஆனாலும் கொரோனா படம் இடையில் நின்றது..
கொரோனா பரவல் குறைந்தவுடன் மீண்டும் படபிடிப்பு தொடங்கியது. யாஷிகா இப்படத்தில் கதாநாயகி என தகவல் வெளியானது.
லெஜண்ட் படத்துக்காக ரஜினி, விஜய் ஸ்டைலில் காஸ்ட்யூம் கோரியோகிராப் அமைத்து பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில் லெஜண்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் காட்சிகள் வெளியிடப்பட்டது. வண்ணமயமாக பாடல் உள்ளது.
பாடல் முழுவதும் இளைஞர்போல் துள்ளிவிளையாடுகிறார் அருள். அவரது காஸ்ட்யூம்கள் ரஜினி, விஜய் படத்தை ஞாபகப்படுத்துகின்றன.
கதாநாயகி யாஷிகாவை சைக்கிளில் சுற்றி வந்து டூயட் பாடுகிறார் அண்ணாச்சி. இக்காட்சி வண்ணமயமாக படமாக்கப்பட்டுள்ளது.
லெஜண்ட் படத்தில் எத்தனை பாடல்கள் என்கிற தகவல் இல்லை. ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது அடுத்தடுத்து செகண்ட் சிங்கிள், ட்ரைலர் வெளியாகும் என தெரிகிறது.
தனது வயது, சினிமா அனுபவமின்மை, சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்வது குறித்து கவலைப்படாமல் கதாநாயகனாக கலக்கும் அண்ணாச்சியை பாராட்டத்தான் வேண்டும்.
லெஜண்ட் பட ஃபர்ஸ் சிங்கிள் ரஜினி, விஜய் பட பாணியில் கலர்ஃபுல்லான பாடல் காட்சியாக வித விதமான காஸ்ட்யூமில் கலக்கியுள்ளார்.