Tap to Read ➤

ராய் லக்‌ஷ்மியுடன் குத்தாட்டம் போடும் லெஜண்ட் அண்ணாச்சியின் வாடி வாசல்

லெஜண்ட் சரவணன் அண்ணாச்சியின் லெஜண்ட் பட செகண்ட் சிங்கிள் பாடல் கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது. விதவிதமான நடிகைகளை பாடலுக்கு பயன்படுத்துகிறார் அண்ணாச்சி. இந்த வீடியோவை ஒரே நாளில் 23 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
தி லெஜண்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளில் யாஷிகா ஆனந்துடன் ஆட்டம் போட்ட அண்ணாச்சி செகண்ட் சிங்கிளில் ராய் லக்‌ஷ்மியுடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.
லெஜண்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடிப்பில் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது தி லெஜண்ட் திரைப்படம்.
இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான முதல் பாடல் ஹிட் அடித்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள இரண்டாம் பாடலும் கலன்னு இருக்கு.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சினேகன் வரிகளில் ராஜு சுந்தரம் மாஸ்டர் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். லெஜண்ட் சரவணன் மற்றும் ராய் லக்‌ஷ்மி இணைந்து செம குத்து குத்தி உள்ளனர்.
முதல் பாடலான மொசலு மொசலு பாடலை போலவே இந்த பாடலும் கேட்க நல்லாவே இருக்கு. ஹாரிஸ் ஜெயராஜ் ஐ எம் பேக் என மார்தட்டி சொல்லும் அளவுக்கு அருமையான பாடல் வரிகளுடன் பாடலை கொடுத்துள்ளார்.
விஷுவலாக பார்க்கும் போது ராய் லக்‌ஷ்மியின் நடனத்துடன் திருவிழா செட் மற்றும் சக நடனக் கலைஞர்கள் என அனைவருமே கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
நடிகை ராய் லக்‌ஷ்மியின் குத்தாட்டம் வேறலெவலில் பாடலுக்கு வலிமையை சேர்க்கிறது. செம கலர்புல்லாக இந்த பாடலையும் முடிந்த வரை ஹிட்டாக்கி விட வேண்டும் என்கிற முயற்சி தெரிகிறது.
அடுத்தடுத்த பாடல்களில் எல்லாம் எந்த எந்த நடிகைகள் வரப்போகின்றனர், ஊர்வசி ரவுத்தேலாவை எப்ப அண்ணாச்சி காட்டுவீங்க என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
செக்க செக்க செகப்பி என ராகவா லாரன்ஸ் வர்ணித்து பாடிய ராய் லக்க்ஷ்மியின் கலரே டல் ஆகும் அளவுக்கு மேக்கப்பில் முங்கி வந்தது போல டாலடிக்கிறாரு லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி.
முடிந்த வரை கஷ்டப்பட்டு ஸ்டெப்ஸ் போட்டு நடனமாடி உள்ளார் அண்ணாச்சி. ஆனால், அவரது நடனம் அந்த அளவுக்கு ரசிக்கும்படியாக இருப்பதைவிட ட்ரால் செய்யவே பார்க்கின்றனர்.
லிரிக் வீடியோவாக ரிலீஸ் செய்யாமல் முழு வீடியோ பாடலையும் இங்கேயே காட்டிட்டா அப்புறம் தியேட்டருக்கு எதை பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவில் இதையெல்லாம் காட்டலாமே? என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
மொத்தத்தில் லெஜண்ட் அண்ணாச்சி திரையுலகில் ஏதோ ஒரு வகையில் பேசுபொருளாகி வருகிறார் என்பது மட்டும் நிச்சயம்.