Tap to Read ➤

லவ் டுடே - பிளாக் பஸ்டர், மாஸ் காட்டிய பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் தானே இயக்கி, நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் நவம்பர் 4ல் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது, முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
லவ் டுடே - இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தானே இயக்கி நாயகனாக நடித்திருக்கும் காதல் & நகைச்சுவை திரைப்படம்.
இப்படத்தினை தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் இணைந்து 'எ.ஜி.எஸ் என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளனர்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா லவ் டுடே திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
லவ் டுடே படத்தினை உலகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
காதல் மற்றும் நகைச்சுவை திரைக்கதையில் தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் வண்ணத்தில் இப்படம் உருவாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தான் நடித்த ஷார்ட் பிலிமான அப்பா லாக் (App(a) Lock) கதையையே முழு நீளத் திரைப்படமாக எடுத்து நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமாகியுள்ளார், பிரதீப்.
இப்படத்தின் மூலம் இயக்குனர் & நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார், பிரதீப் ரங்கநாதன்.
லவ் டுடே திரைப்படம் பற்றிய முழு தகவல்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்