Tap to Read ➤

தமிழ் சினிமாவின் தைரியமான மனிதர் எம்.ஆர்.ராதா

தமிழ் சினிமாவின் ஆளுமை என்றால் முதலில் வருபவர் எம்.ஆர்.ராதா. துணிச்சலான கருத்துகளுக்கு பெயர் போனவர் எம்.ஆர்.ராதா.
Filmibeat Tamil
நாடக துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர், ஆனாலும் தாம் இறக்கும் வரை நாடகத்தை கைவிடாதவர். பெரியாரின் மிகப்பெரிய சீடர், அவர் பிறந்த நாளில் மறைந்தது மிகப்பெரிய நிகழ்வான ஒன்று.
வெளிநாட்டில் தொழிலாளர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று நீ வந்து பேசணும், என்று எஸ்.எஸ்.ஆர் கேட்க, “அங்க நின்னுகிட்டு கூட்றான் இங்க குனிஞ்சிகிட்டு கூட்றான்னு சொல்லு போ” என்று எம்.ஆர்.ராதா சொல்வார்.
ஜீவகாருண்ய சங்கம்னா என்னா தம்பி அர்த்தம்? என்று எம்.ஆர்.ராதா கேட்க உயிர்களை கொல்லக்கூடாது என்பார் எஸ்.எஸ்.ஆர், உயிர்கள கொல்ல மாட்டீங்களா அப்ப ராத்திரியில மூட்டப்பூச்சி கடிச்சா என்ன பண்ணுவீங்கன்னு எம்.ஆர்.ராதா கேட்பார்.
ரத்தக்கண்ணீர் அதன் வசனங்களுக்காக பெயர் போனது அதைவிட அதில் நடித்த எம்.ஆர். ராதாவின் நடிப்பு அதைவிட பிரமாதம். .
தாயுடன் ஏற்பட்ட கோபத்தில் வீட்டைவிட்டு பிரிந்து சென்னைக்கு ஓடிவந்து சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் போர்டர் வேலை பார்த்துவந்தார்.
ஒரு நாள் பயணியாக வந்த ஆலந்தூர் பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளர் எம்.ஆர்.ராதாவின் செயலை பார்த்து அவரை தன்னுடைய நாடக கம்பெனியில் சேர்த்துக்கொண்டார்.
தமிழகத்தில் 1930 களில் எம்.ஆர்.ராதா கொடிகட்டி பறந்தார். பின்னர் 1937 ஆம் ஆண்டில் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்து புகழ்பெற்றார். அந்தகாலத்தில் சீர்த்திருத்த கருத்துக்களை வைத்து ராதா போட்ட நாடகம் பலத்த வரவேற்பையும், எதிர்ப்பையும் ஒரு சேர பெற்றது.
1942 ஆம் ஆண்டு திரையுலகை விட்டு விலகி நாடகத்துறைக்கே போனார் எம்.ஆர்.ராதா. எம்.ஆர்.ராதா என்றால் நாடக உலகிலும், திரையுலகிலும் அனைவருக்கும் பயம். அதிகம் படிக்காவிட்டாலும் ஆங்கில பாணியை அவர் கையாளும் விதம் அலாதியானது.
1954 ஆம் ஆண்டு ரத்தக்கண்ணீர் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தமிழகம் முழுவதும் பட வசனத்தையும், எம்.ஆர்.ராதாவின் நக்கல் நய்யாண்டி வசனத்தையும் பேசாத இளைஞர்களே இல்லை எனும் அளவுக்கு வசனம் புகழ்பெற்றது.
குணச்சித்திரம், வில்லன், காமெடி என அவர் கைவைக்காத இடமே இல்லை எனலாம். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் ஆகியோருக்கு நாடக உலகில் எம்.ஆர்.ராதா சீனியர்.
எம்.ஆர்.ராதா வெளிநாட்டு காரில் தனது எருமை மாட்டுக்கு வைக்கோல் வாங்கிக்கொக்கொண்டு சென்னையைச் சுற்றி வலம் வந்தது பெரிதாக பேசப்பட்டது.
விலை உயர்ந்த காரில் மாட்டுக்கு வைக்கோலா என கேட்டவர்களுக்கு ”கலர் பெயிண்ட் அடிச்சு வெச்சா வெளிநாட்டு கார் என்று தலையிலா தூக்கி வச்சிக்க முடியும்” என்று கேட்டவர் எம்.ஆர்.ராதா.
சினிமா காரண தலையில தூக்கி வச்சுகிட்டு ஆடாதே, அவன் காசு வாங்கிக்கிட்டு அவன் தொழிலை செய்றான் என்று வெளிப்படையாக பேசியவர். தனது நாடகத்தை பார்க்க பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்தால் அடித்து துரத்துவார்.
எம்.ஆர்.ராதா அவரது வசனம், உடல் மொழி, சீர்த்திருத்த கருத்துகள், முற்போக்கு கருத்துகளுக்காக அவரை பிடிக்காதவர்களாலும் ரசிக்கப்பட்டதுதான் அவரது மிகப்பெரிய வெற்றி.
சினிமா புகழ், பணம், வெற்றி அனைத்தையும் சம்பாதித்தாலும் சர்ச்சையிலும் சிக்கினார். எம்ஜிஆரை சுட்ட வழக்கில் சிக்கினார். அத்துடன் அவரது திரை வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 67 ஆம் ஆண்டு முதல் 71 ஆம் ஆண்டு வரை சிறையிலிருந்தார்.
சிறையிலிருந்து வெளிவந்த அவர் சில படங்களில் நடித்தார். மீண்டும் நாடகங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் ஒரு விழாவில் முதல்வர் எம்ஜிஆரை சந்தித்தார். இருவரும் அனைத்தையும் மறந்து பேசினர்.
சிறையிலிருந்து வெளிவந்த அவர் சில படங்களில் நடித்தார். மீண்டும் நாடகங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் ஒரு விழாவில் முதல்வர் எம்ஜிஆரை சந்தித்தார். இருவரும் அனைத்தையும் மறந்து பேசினர்.
தமிழ் சினிமாவில் எதற்கும் அஞ்ஞாத ஆளுமை மிகுந்தவர் எம்.ஆர்.ராதா, பெரியாரின் சீடரான அவர் 1979 ஆம் ஆண்டு செப்.17 பெரியார் பிறந்த நாளில் மறைந்தது ஏதேச்சையாக அமைந்தது என்றாலும் பெரிதாக பார்க்கப்படுகிறது.