Tap to Read ➤

மலையாள படம் கேரள அரசின் விருது பெற்ற திருநங்கை நேகா பாராட்டிய முதல்வர்

மலையாள படம்..கேரள அரசின் விருது பெற்ற திருநங்கை நேகா..பாராட்டிய முதல்வர்
Filmibeat Tamil
சென்னையைச் சேர்ந்த திருநங்கை நேகா மலையாளப்படம் ஒன்றில் நடித்ததன் மூலம் கேரள அரசின் விருதினைப்பெற்றுள்ளார்.
மலையாளப்படமான அந்தரம் படத்தில் நடித்ததற்காக கேரள அரசின் சிறந்த நடிகைக்கான திருநங்கை பிரிவு விருது திருநங்கை நேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தனது 18 வயதில் திருநங்கையாக மாறியதால் வீட்டை விட்டு வெளியேறினார் திருநங்கை நேகா.
தன் வீட்டாரால் ஒதுக்கப்பட்ட அவரை திருநங்கைகள் அரவணைத்தார்கள். பெற்ற தாய்கூட இத்தனை வருடங்களில் ஒரே ஒருமுறைதான் பார்த்ததாக வருத்தமுடன் தெரிவித்துள்ளார் நேகா.
தானே படித்து முன்னேறி பின்னர் வேலைக்கு முயற்சி செய்தபோது தான் தேர்ச்சி பெற்றாலும் இவர் எந்த பாத்ரூமை உபயோகிப்பார் என அங்கிருந்த ஊழியர்கள் கேட்டதால் வேலை மறுக்கப்பட்டது என்று வருத்தமுடன் கூறினார்.
திருநங்கைகளுக்கு வீடு கூட கிடைப்பதில்லை, கிடைத்தாலும் இருமடங்கு வாடகை கொடுக்கும் நிலைதான், படிப்பறிவு இல்லாவிட்டால் செக்ஸ் தொழிலாளர்களாகத்தான் வாழும் நிலை உள்ளது என்று வருத்தமுடன் கூறியுள்ளார்.
தொண்டுள்ளம் ஒன்றில் பணியாற்றி, யூடியூப் சானலில் புகழ்பெற்ற நேகாவுக்கு மலையாளப்படமான அந்தரம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. திருநங்கைகள் பிரச்சினை பற்றி பேசும் படம் இது.
இந்த விருதைப்பெற்றதற்காக தமிழக முதல்வர் திருநங்கை நேகாவை வாழ்த்தி வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்தவுடன் இதயம் ஒரு முறை நின்று துடித்தது என்கிறார் நேகா.
நேகா விருது பெற்றதை அடுத்து அவரது படத்தை தனது அட்டைப்படத்தில் வெளியிட்டுள்ளது ஃபெமினா இதழ். இதுவரை நடிகைகள் மட்டுமே அலங்கரித்த இதழில் திருநங்கை நேகா படம்.
திருநங்கையாக ஆண்கள் நடிக்காமல் அந்த வேடத்திற்கு திருநங்கைகளை நடிக்க வையுங்கள் என நேகா கோரிக்கை வைக்கிறார்.