Tap to Read ➤

மம்முட்டியின் பீஷ்ம பர்வம் மினி விமர்சனம்

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடிப்பில் ஏப்.1 அன்று ஓடிடி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள பீஷ்ம பர்வம் படம் காட்ஃபாதர் பாணி படமாக அமைந்துள்ளது. ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொச்சியில் இருக்கும் மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தில் 3 சகோதரர்கள் ஒரு பெண். ஒருவர் உதவாக்கரை, இரண்டாமவர் மம்முட்டி, மூன்றாமவர் சர்ச் பாதிரியார், 4 வது ஒரு பெண்.
உதவாக்கரை மூத்த அண்ணனுக்கு 2 மகன்கள், ட்ரக், சினிமா எடுக்கிறேன் என பணத்தை விரையமாக்குவதும், ஊதாரித்தனமாக திரிவதும் வேலை.
அடுத்து மைக்கேல். சட்டக்கல்லூரி மாணவர் தந்தைக்காக பழிவாங்கி ஜெயிலுக்கு போய்விட்டு வருகிறார். கிட்டத்தட்ட தாதா.
மிகப்பெரிய குபேரக் குடும்பத்தில் மூத்த மகனாக இல்லையென்றாலும் அனைத்து பொறுப்புகளும் மைக்கேலிடம் (மம்முட்டி) வருகின்றன.
மூன்றாவது மகன் சர்ச் ஃபாதராகிறார். பெண் விஷயத்தில் வீக், குடும்ப விஷயத்தில் மம்முட்டிக்கு எதிராக மூத்த அண்ணன், அவர் மகன்களுடன் கூட்டு.
நான்காவது பெண், காவல் அதிகாரியை மணந்து கொள்கிறார். ஒரு பெண், ஒரு பையனுடன் வாழ்கிறார். காவல் அதிகாரிக்கும் மம்முட்டியை பிடிக்காது.
ஒரு மோதலில் தன்னை காப்பாற்றி தனக்காக உயிர் விட்ட நண்பன் குடும்பத்தின் இரண்டு பிள்ளைகளை தன் பிள்ளைகள் போல் பார்த்துக்கொள்கிறார் மம்முட்டி. நண்பனின் மனைவியாக நதியா.
மம்முட்டியால் கொல்லப்பட்ட இரண்டு பேரின் மகன் சுதேவ் நாயர் மும்பையில் தாதாவாக இருக்கிறார் மம்முட்டியை கொல்ல கொச்சி வருகிறார்.
அவருடன் மம்முட்டியின் சகோதரர் மகன்கள், தம்பி, தங்கை கணவன் இணைகிறார்கள். இதனால் சீண்டப்படும் மம்முட்டி விஸ்வரூப அவதாரம் எடுப்பதே மீதியுள்ள கதை.
நண்பனின் மகன் ஸ்ரீநாத் பாஸியை சுதேவ் நாயரின் ஆட்களை கொலை செய்ய அண்ணன் ஷௌபின் சாகர் கொதித்தெழுகிறார்.
ஒரு கட்டத்தில் சுதேவ் நாயரின் ஆட்கள் மம்முட்டியை கொலை செய்ய முயற்சிக்க அதில் கடும் தாக்குதலுக்கு ஆளான மம்முட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
பின்னர் மருத்துவமனையிலிருந்தே எதிராளிகளை மம்முட்டி பழிவாங்குகிறாரா? என்பதே கதை.
ஆனால் கதை பழைய காட் ஃபாதர் கதை. மம்முட்டியை தவிர யார் நடித்தாலும் பார்க்க முடியாது. படம் மெகா ஹிட்.
படத்தில் முக்கிய பங்கு வகிப்பது மம்முட்டியின் ஹேர் ஸ்டைல், இசை, கேமரா. மம்முட்டி வரும் காட்சிகளில் அந்த இசை தனிரகம்.