Tap to Read ➤

மே முதல் வாரத்தில் வெளியான படங்கள் நீங்கள் பார்க்கவேண்டியவை

மே மாதம் முதல் வாரத்தில் ரிலீசான படங்கள், நீங்கள் கட்டாயம் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படங்கள் ஒரு பார்வை.
Filmibeat Tamil
மே மாதம் முதல் வாரத்தில் பல படங்கள் வெளியாகியுள்ளது. அதில் மலையாளத்தில் 2 படங்களும், ஆங்கிலப்படம் ஒன்றும், 3 தமிழ் படங்களும் வந்துள்ளது.
முதலாவதாக மார்வெல் தயாரிப்பில் டாக்டர் ஸ்ட்ரேஞ்சுக்காக வந்த 2 வது படம், வாண்டா விஷன் சீரிஸ் ஓடிடியில் வெளியான நிலையில் அதற்கு பின் வந்த வாண்டாவுக்கான முக்கிய படம் ’டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னெஸ்’
3 டி வெர்ஷனில் வெளியாகியுள்ள படம் இது தியேட்டர்களில் மே. 6 அன்று வெளியானது. இந்தப்படத்தில் பழைய மார்வெல் கேரக்டர்கள் சில வந்துள்ளன. ப்ரஃபசர் எக்ஸ், மிஸ்டர் பண்டாஸ்டிக், பிளாக் போல்ட், அமெரிக்கா சாவேஸ், கேப்டன் கார்டர் போன்ற கேரக்டர்கள் வந்துள்ளன.
அடுத்தப்படம் ’சிபிஐ டைரி குறிப்பு-5 தி பிரெய்ன்’ படம் ஆகும். இந்தப்படம் மம்முட்டி நடித்து 1987 ஆம் ஆண்டு வெளியான ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு படத்தின் 5 ஆம் பாகம் எனலாம்.
முதல் 4 பாகங்களில் 1987 ஆம் ஆண்டு சிபிஐ டைரி குறிப்பு படமும், அடுத்து 1989 இல் ஜாக்ரதா என்ற படம் வெளிவந்தது. அதுவும் ஹிட். அதன் பிறகு 2004 இல் சேதுராம் அய்யர் சிபிஐ திரைப்படம். 2005 இல் நேரறியான் சிபிஐ வந்தது.
2005 ஆம் ஆண்டுக்கு பின் நீண்ட எதிர்பார்ப்பில் இருந்து ரசிகர்கள் ஆசையை தீர்க்க 17 ஆண்டுகள் கழித்து மம்முட்டியின் நடிப்பில் மீண்டும் சிபிஐ டைரி குறிப்பு -5 தி பிரெய்ன் வந்துள்ளது. நல்ல க்ரைம் ஸ்டோரியாக ரசிகர்களுக்கு விருந்தாக இப்படம் இருக்கும்.
அடுத்தப்படம் ’கூகுள் குட்டப்பா’ இது மலையாளத்தில் வெளியான ’ஆன் ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தின் ரீமேக் படம் ஆகும்.
அடுத்து வெளிவந்துள்ள படம் சாணி காயிதம் படம். செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படம் ஓடிடி தளத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. கதை பழைய டைப் என்றாலும் காட்சி அமைப்பு, கதை சொல்லும் விதம் உள்ளிட்டவை நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
அடுத்து வெளியாகியுள்ள படம் விசித்திரன். எஸ்.ஆர்.சுரேஷ் நடித்துள்ள படம். இந்தப்படமும் மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ஜோசப் படத்தில் தமிழ் ரீமேக் ஆகும்.
ஜோசப் படத்தில் ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடித்திருப்பார். விஆர்எஸ் வாங்கிய ஹெட் கான்ஸ்டபிள் ஆக நடித்திருப்பார். மனைவி கொல்லப்பட்டதால் ஏற்பட்ட சோகத்துடன் இருப்பார். ஆனால் அவர் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் காட்சி தனி ரகம்.
இந்தப்படம் க்ரைம் படங்களை விரும்பும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. பின்னர் இதை சுரேஷ் நடிப்பில் தமிழில் ரீ மேக் செய்துள்ளனர். ஜோஜு ஜார்ஜ் வேடத்தில் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார்.
அடுத்து இதே வாரத்தில் வந்துள்ள ஒரு மலையாளப்படம் படம் பிரித்விராஜ் நடிப்பில் வந்துள்ள ஜனகனமன தமிழிலும் இப்படம் வந்துள்ளது.
நேரமையான அதிகாரி கடுமையாக பழி வாங்கப்படுகிறார், வெகுண்டெழும் அவர் பழிவாங்குவதாக கதை அமைந்துள்ளது. வழக்கமாக பிரிதிவிராஜுக்கு என தமிழ் ரசிகர்கள் உண்டு அது படத்துக்கு சாதகமாக அமையும்.