Tap to Read ➤

மே 9-ல் வெளியான நினைத்ததை முடிப்பவன்...வில்லனாகவும் எம்ஜிஆர்

திரைப்படங்களை தனது அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய எம்ஜிஆர் இந்திப்படத்தின் தழுவலாக எடுத்த ’நினைத்ததை முடிப்பவன்’ படத்திலும் அதை கையாண்டிருப்பார்.
Filmibeat Tamil
எம்ஜிஆர் நடித்த முக்கியமான படங்களில் ஒன்று நினைத்ததை முடிப்பவன். இப்படம் வெளியாகி இன்றோடு 47 ஆண்டுகள் ஆகிறது
எம்ஜிஆர் நடித்த முக்கியமான படங்களில் ஒன்று நினைத்ததை முடிப்பவன். இப்படம் வெளியாகி இன்றோடு 47 ஆண்டுகள் ஆகிறது
அண்ணன் தங்கை பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட படம். எம்ஜிஆருக்கு சொல்லியா தரணும் சும்மா பின்னி விட்டார்
தங்கையாக தேசிய விருதுபெற்ற சாரதா, அவருடன் எம்ஜிஆர் பாடும் ‘பூ மழைத் தூவி’ பாடல் உருக்கமாகவும் ரசிக்கும்படியும் இருக்கும்
இந்தப்படத்தில் எம்ஜிஆருக்கு ரெட்டைவேடம். வில்லன் பாத்திரமும் எம்ஜிஆரே நடித்தார். இதில் ஒரு காட்சியில் வில்லன் ராஜேஷ்கன்னா மதுக்கோப்பையுடன் இருப்பார், ஆனால் அதே காட்சியில் நடித்த எம்ஜிஆர் மதுகோப்பையை தவிர்த்திருப்பார். அவர்தான் எம்ஜிஆர்
ஹீரோ வில்லன் ஆனால் வில்லன் நல்லவனாகத்தானே இருப்பார், இந்தப்படத்தில் நம்பியாருக்கு நல்லவர் வேடம் அதுவும் இன்ஸ்பெக்டராக எம்ஜிஆரின் தங்கை சாரதாவை காப்பாற்றி மணப்பவராக
கிராமத்து இளைஞர் சுந்தரமாக பேண்ட் வாத்திய கலைஞராகவும், ரஞ்சித்தாக கொள்ளைக்கூட்டத் தலைவனாகவும் இரண்டு ரோலில் எம்ஜிஆர் நடித்திருப்பார்
சுந்தரம் தன்னைப்போல இருப்பதால் அவரை வைத்து தன் கொள்ளைத்திட்டத்தை அரங்கேற்ற நினைக்கும் ரஞ்சித் ஒரு கட்டத்தில் சுந்தரத்தின் தங்கை சாரதாவையும் கடத்துகிறார்
கடைசியில் உண்மை தெரிந்து சுந்தரம் கொள்ளையன் எம்ஜிஆரை தங்கைக் கணவர் நம்பியாருடன் சேர்ந்து பிடித்துக் கொடுப்பார். கடைசியில் கோர்ட் காட்சி பிரமாதமாக இருக்கும்
இசைக்கருவி, நாய் என நல்லவரான எம்ஜிஆரை அடையாளம் காணமுடியாமல் திணற தாய்ப்பாசத்தை வைத்து வில்லன் எம்ஜிஆர் வாய்மூலமாகவே உண்மையை வரவழைப்பார்கள்
இந்தப்படத்தில் எம்ஜிஆருக்கு லதா, மஞ்சுளா என இரண்டு ஜோடிகள். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து என பாடும் பாடல் சிறப்பான இசைக்காக பேசப்பட்டது
அன்றைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரச்சார பாடலாக ’கண்ணை நம்பாதே’ பாடலை எம்ஜிஆர் பயன்படுத்தியிருப்பார். ’என் மனதை நான் அறிவேன் என் உறவை நான் மறவேன்’ என்ற வரிகள் எம்ஜிஆரே திருத்தி எழுதியதாக மருதகாசி குறிப்பிட்டிருப்பார்
அண்ணன் தங்கை பாசத்தை பிரதானமாக வைத்து அதில் கிரைம் கலந்து எடுக்கப்பட்ட படம் 1975 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி வெளியாகி நன்றாக ஓடியது