Tap to Read ➤

ஓடிடி தளத்தில் இன்று வெளியான படங்கள்...முழு விவரம்

ஏப்ரல் 1 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள படங்களை பார்ப்போம். முக்கியமான ஆங்கிலப்படம், பயோபிக் பிக்சர்கள், மலையாளப்படங்கள், வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது.
ஓடிடி தளத்தில் இன்று ஏப்-1 முக்கிய படங்கள் வெளியாகியுள்ளன. மலையாளம், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் முக்கிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளன.
அனைவரும் பார்க்கவேண்டிய முக்கியமான படம் கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பே வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படம். கௌன் பிரவீன் தாம்பே (kaun praveen thambe). முதல்தர கிரிக்கெட்டில் போட்டியில் விளையாடியுள்ளார். ஐபிஎல்-ல் தேர்வு செய்யப்பட்டபோது அவருடைய வயது 41.
ஓடிடி தளத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெப் சீரிஸாக வெளியாகியுள்ளது மூன் நைட் (Moon Knight). ஆறு தொடர்களைக் கொண்ட வெப்சீரீஸ் இதில் முதல் பாகம் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது.
ஓடிடி தளத்தில் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ள படம் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி, நதியா நடித்த ‘பீஷ்ம பர்வம்’(Bheeshma Parvam). இந்த படம் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.
பிரபாஸின் ’ராதே ஷ்யாம்’ (Radhe Shyam). இந்த படம் ஏற்கனவே திரையரங்கில் வெளியாகி தற்போது ஓடிடி தளத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
ஓடிடி தளத்தில் அமேசன் பிரைம்-ல் வெளியாகி உள்ள ஒரு பயோபிக் பிக்சர் ‘ஸ்பென்சர்’(Spencer). இங்கிலாந்து இளவரசி கார் விபத்தில் மறைந்த டயானாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.
அமேசான் ப்ரைம்-ல் வெளியாகி உள்ள மலையாள படம் படா(PADA) இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். ஜோஜு ஜார்ஜ், பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர்.
ஹே சினாமிகா (Hey Sinamika)ஏற்கனவே தியேட்டர்களில் வெளியாகி உள்ள இந்த படம், இன்று ஓடிடி தளத்தில் நெட்ஃபிலிக்சில் வெளியாகி உள்ளது. துல்கர் சல்மான் தமிழில் நடித்த காதல் படம்.
ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மற்றொரு மலையாள படம் மெம்பர் ரமேஷன் 96 ஆம் வார்டு (Member Rameshan 9aam Ward) சாதாரண இளைஞன் தற்செயலாக அரசியலுக்கு வந்து பெரிய ஆளாக மாறுவதே படத்தின் மூலக்கதை. ZEE-5-ல் வெளியாகியுள்ளது.