Tap to Read ➤

’Mukhbir’ வெப் சீரிஸ் ரிவ்யூ..1965 ஆம் ஆண்டு இந்திய-பாக் போர்..ஒரு Raw

வெப்சீரீஸில் நாம் ரசித்து பார்க்கும் பல கிரைம் த்ரில்லர் சீரீஸ்கள் உள்ளது. அதில் முக்கியமான சீரீஸ் முக்பீர் வெப்சீரீஸ் ஜீ.தமிழில் வெளிவந்துள்ளது. இந்திய உளவாளியின் கதையை மையமாக கொண்ட கதை.
Filmibeat Tamil
1965 ஆம் ஆண்டு மிகக்கடினமான சூழ்நிலையில் இந்தியா மீது பாகிஸ்தான் போர்த்தொடுக்க முனைந்த நேரத்தில் நடக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்ட கதை
நேருவின் மறைவு, லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக பொறுப்பேற்ற நேரத்தில் நடந்த சர்வதேச நிகழ்வுகள், பாகிஸ்தான் செய்த சதிகளை முறியடிக்க இந்திய உளவு அமைப்பின் செயல்பாட்டை அழகாக சித்தரித்துள்ளனர்.
போர் மூளுவதற்கு முன் நடந்த பிரச்சினைகளை பின்னணியாக வைத்து அழகாக திரைக்கதை அமைத்து எடுக்கப்பட்டுள்ளது. ரா உளவாளி எத்தகைய துன்பங்களை பிரச்சினைகளை சந்திப்பார்கள் என்பதை விளக்கும் வெப் சீரீஸ் இது.
பாகிஸ்தானில் உள்ள முக்கிய ரா உளவாளி கொல்லப்பட அதுகுறித்து இந்திய ரா தலைமை இன்னொரு சரியான நபரை அனுப்ப முடிவெடுக்கும் பொறுப்பு உதவி தலைவர் பிரகாஷ் ராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது.
சாதாரண ஒரு இளைஞன் திறமைசாலி என்கிற அடிப்படையில் ஹர்ஃபான் புகாரியை தேர்வு செய்கிறார் ரா அதிகாரி பிரகாஷ் ராஜ். இந்திய-பாக் பிரிவினையில் பிரிந்த குடும்பத்தில் உள்ள இளைஞராக லாகூரில் உள்ள சித்தப்பா குடும்பத்தை சந்திக்க செல்வது போல் செல்கிறார், ஹர்ஃபான்.
உள்ளே நுழையும் போதே அவரை பிடித்துவிடுகிறது ஐஎஸ் ஆனால் தப்பி சித்தப்பா வீட்டுக்கு வருகிறார். ரா சொல்லியபடி அண்ணன் மகனாக நடிக்க உள்ளே நுழைய நம்ப மறுக்கிறார் சித்தப்பா.
பின்னர் ஒருவாறு பாட்டியை நம்ப வைத்து தங்கும் ஹர்ஃபான் அங்குள்ள உளவாளியுடன் சேர்ந்து பிரகாஷ் ராஜ் சொன்னப்படி இயங்குகிறார். பாகிஸ்தான் மிலிட்டரி பிரிகேடியர் ஹபீபுல்லா போதை மருந்து கடத்துகிறார்.
அவருடன் இணைந்து உதவுவதுபோல் நடித்து உள்ளே நுழைகிறார் ஹர்ஃபான், பாக் ஜெனரல் ஹைதி ஜனாதிபதியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். அதே நேரம் இந்தியாவை வீழ்த்தி ஜம்மு காஷ்மீரை பிடிக்க துடிக்கிறார்.
அவருடன் இணைந்து உதவுவதுபோல் நடித்து உள்ளே நுழைகிறார் ஹர்ஃபான், பாக் ஜெனரல் ஹைதி ஜனாதிபதியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். அதே நேரம் இந்தியாவை வீழ்த்தி ஜம்மு காஷ்மீரை பிடிக்க துடிக்கிறார்.
ஜெனரல் ஹைதியின் காதலி பாடகியின் நட்பை பெறுகிறார், ஹர்ஃபான். இதனிடையே பாக் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ தலைவர் ஹர்ஃபானை மோப்பம் பிடித்து விடுகிறார்.
அதற்குள் பாக்கின் சதியை கண்டுபிடித்து ரா தலைமைக்கு அனுப்பி விடுகிறார் ஹர்ஃபான். ஹர்ஃபான் ரா உளவாளி என்பதை அறியாத ஜெனரல் ஹைதி ஒரு அசைன்மெண்ட் தருகிறார். ஆனால் ஐஎஸ்ஐ தலைவர் மோப்பம் பிடித்து விடுகிறார்.
அனைத்தையும் முறியடித்து இந்திய பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாகிஸ்தான் படையெடுப்பை சில வாரங்களில் முறியடிக்கிறார்கள்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் விறுவிறுப்பாக நகர்கிறது. அதற்கு இயக்குநர் ஜெய்பிரசாத், சிவம் நாயர் ஆகியோரை பாராட்டியே தீர வேண்டும்.
அதேபோல் இது 1965 ஆம் ஆண்டு போர்க்காலத்தில் நடந்த கதை என்பதால் இந்த வெப் சீரீஸ் முக்கியத்துவம் பெறுகிறது.