Tap to Read ➤

’நான் ஈ’ நாயகன் நானியின் அடுத்த அவதாரம்

தனது திறமையான நடிப்பால் டோலிவுட் தாண்டி கோல்விட் ரசிகர்களையும் கவர்ந்து வரும் நானி அடுத்து நடிக்கும் தசரா பட ஸ்டில்கள் புஷ்பா படத்தை ஞாபகப்படுத்துவதாக உள்ளது.
பிரபல நடிகர் நானி பல தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் பட ரசிகர்களை முதன் முதலில் கவர்ந்த படம் ‘நான் ஈ’

பாகுபலி தாமதமானதால் இடைப்பட்ட காலத்தில் பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கிய படம்தான் ‘நான் ஈ’
இந்தப்படத்தின் மூலம் அழகான அந்த சாக்லெட் பாய் ஹீரோ யார் என்று தமிழக ரசிகர்கள் திரும்பிப்பார்க்க ஆரம்பித்தார்கள்.
தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே மாறிவிடும் தன்மை கொண்டவர் நானி. இதை அவரது சமீப படமான ஷியாம் சிங்கா ராய் நிரூபித்தது.
கிரிக்கெட் பிளேயராக நடித்து கலக்கிய படம் ஜெர்சி. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. அதில் கிரிக்கெட் பிளேயராக வாழ்ந்திருப்பார்.
திறமையான கிரிக்கெட் பிளேயர் ஏதோ ஒரு காரணத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இதய நோய் இருந்தும் மகனுக்காக சவாலை ஏற்று கிரிக்கெட்டில் சாதிக்கும் பாத்திரமாக நானி அசத்தியிருப்பார்.
சவாலான பாத்திரங்களை ஏற்று நடித்து தென் இந்திய ரசிகர்களின் மனதில் மெல்ல மெல்ல இடம் பிடித்து வருகிறார் நானி. சிறிய வயதில் அவர் ஏற்று நடிக்கும் பாத்திரங்கள் அவர் திறமையை எடுத்துச் சொல்கிறது.
சிறப்பான படமாக நானிக்கு கடந்த ஆண்டு அமைந்தது ஷியாம் சிங்கா ராய் படம். இரட்டை வேடத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
தற்போது நானி தசரா என்கிற படத்தில் நடித்துவருகிறார். இதன் ஸ்டில்கள் புஷ்பா பட பாணியில் உள்ளதால் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.