Tap to Read ➤

நாட்டாமை படம் 28 ஆண்டுகள் நிறைவு..சரத்குமாருக்கு திருப்புமுனை படம்

நாட்டாமை படம் 1994 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைகிறது. பல மீம்ஸுகுகளுக்கு தீம் கொடுத்த, பல நகைச்சுவை காட்சிகளுக்கு தீனிப்போட்ட படம் நாட்டாமை. அரசியல் நையாண்டிக்கும் இந்த படத்தில் கண்டெண்ட் இருந்தது.
Filmibeat Tamil
தமிழக திரைப்படங்களில் நிலச்சுவாந்தார்களை ஹீரோக்களாக மையப்படுத்தி படம் வந்தது இதில் சின்ன கவுண்டர், எஜமான், நாட்டாமை போன்ற கதை அமைப்புகள் கொண்ட படங்கள் ஆரம்ப காலங்களில் வந்தன.
இதில் நாட்டாமை மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படம் ஆகும். 1994 ஆம் ஆண்டு கேஸ்.ரவிக்குமார்-சரத்குமார் கூட்டணியில் உருவான படம் நாட்டாமை. இந்த படத்தில் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்.
ஒருவர் மூத்த அண்ணன், அவர் தம்பி சரத்குமார், ராஜு ரவீந்தர் என மூன்று சகோதரர்கள் கொண்ட பெரிய நிலப்பிரபுத்துவ குடும்பம். ஊரில் செல்வாக்கு மிக்க குடும்பம்.
அண்ணன் சரத்குமார் நாட்டாமை, அவருக்கு பக்க துணையாக அவரது தம்பி சரத்குமார். அண்ணி வேடத்தில் குஷ்பூ நடித்திருப்பார். நாட்டாமையின் தம்பி என்ற பந்தா இல்லாமல் அனைவருக்கும் உதவி புரிபவராக, வீரம் மிகுந்தவராக தம்பி சரத்குமாரின் கேரக்டர் இருக்கும்.
தம்பி சரத்குமாருக்கு மிகப் பெரிய இடத்தில் இருந்து மீனாவை திருமணம் செய்து வைப்பார் நாட்டாமை சரத்குமார் வீட்டுக்கு வந்த மருமகள் பணத்திமிறுடன் நடப்பார். அண்ணன் நாட்டாமை சரத்குமாரிடமே அதை காண்பிப்பார்.
மீனாவின் தந்தை, சரத்குமார் முன்வந்து கைகட்டி நின்று எங்கள வாழவைத்ததே நீங்க தான் என்று பேசுவார். இதைப் பார்ப்பது பார்த்து விக்கித்துப் போவார் மீனா. அதன் பின்னர் நாட்டாமை சரத்குமாரின் பெருமைகள் தெரிந்து தன்னை மாற்றிக் கொள்வார் மீனா.
பொன்னம்பலத்தின் சதியில் சிக்கிய தம்பி சரத்குமாருக்கு தண்டனை கொடுத்திருப்பார் நாட்டாமை. அதை அறிந்து மனம் உடைந்து அங்கேயே இறந்து விடுவார்.
இந்த படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றது. படத்தில் நடித்த சரத்குமாருக்கு இப்படம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்த படத்தில் கவுண்டமணி - செந்தில் காமெடியும் மிகப் பிரபலம். மைசன், மைசன் என செந்தில் அழைப்பதும், பெண் பார்க்க போன இடத்தில் பெண்ணின் தாயார் தனது சித்தி என செந்தில் அறிமுகப்படுத்தும் காட்சி செம காமெடி
இவ்வளவு பிரச்சனை நடக்குது இங்க ஒருத்தன் உட்கார்ந்து மிச்சர் சாப்பிட்டு இருக்கான் இவன் யாரு என்று கவுண்டமணி கேட்பார். மிகப்பெரிய அளவில் ரசிக்கப்பட்ட ஒரு காமெடியாகவும் இதில் மிச்சர் சாப்பிடுபவரை வைத்து பல மீம்ஸ்கள் அதன் பின்னர் வெளிவந்தது.
நாட்டாமை படம் வெளிவந்து இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் பாடல் மிகப்பிரபலம். இந்த படம் வெளிவந்த பிறகு இதே பாணியில் பல படங்கள் பிறகு வெளிவந்தன