Tap to Read ➤

37 வயதில் மறைந்த கானக்குயில் சுவர்ணலதா

'nightingale of tamil cinema' swarnalatha birthday
Filmibeat Tamil
பின்னணி பாடகிகள் பலர் கோலோச்சிய காலத்தில் தனது கானக்குரலால் மிக விரைவில் ரசிகர்களை கவர்ந்து முன்னுக்கு வந்தவர் சுவர்ணலதா.
இவர் பாடிய ”போவோமா ஊர்கோலம்”, ”நீ எங்கே என் அன்பே”, ”போறாளே பொன்னுத்தாயி” பாடல்களை ரசிகர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
கேரளாவில் பிறந்த ஸ்வர்ணலதா 3 வயதில் பாடத்தொடங்கினார். அவரது குரல் வளம் குறுகிய காலத்தில் அவரை உச்சத்திற்கு கொண்டுச் சென்றது.
தமிழில் முதன்முதலில் சுவர்ணலதாவை அறிமுகப்படுத்தியவர் எம்.எஸ்.வி. நீதிக்கு தண்டனை படத்தில் சின்னஞ்சிறுகிளியே பாடல் மூலம் அறிமுகமானார்.
ஸ்வர்ணலதாவின் இனிய குரல் இளையராஜாவை கவர்ந்தது. அவரது படங்களில் தொடர்ந்து வாய்ப்பளித்தார். சின்னத்தம்பி படத்தில் அவர் பாடிய பாடல்கள் பெரும் ஹிட் அடித்தது.
”மாலையில் யாரோ மனதோடு பேச” பாடல் இன்றும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் ஒரு பாடல் ஆகும்.
அடுத்து கேப்டன் பிரபாகரன் படத்தில் ”ஆட்டமா தேரோட்டமா” என்கிற பாடலும், தர்மதுரை படத்தில் “மாசி மாசம் ஆளான பொண்ணு” பாடலும், தளபதி படத்தில் “ராக்கம்மா கையத்தட்டு” பாடலும் ஹிட் 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காதலன் படத்தில் வரும் “முக்காலா முக்காபலா” பாடல் மூலம் அறிமுகமானார். ”அக்கடான்னு நாங்க எடைபோட்டா” பாடலும் பெரிதாக வரவேற்பை பெற்றது.
ஸ்வர்ணலதா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கருத்தம்மா படத்துக்காக போறாலே பொன்னுத்தாயி” பாடலை பாடியதற்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப்பெற்றார்.
"ஸ்வர்ண குயில்" என்று குறிப்பிடப்படும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம், பெங்காலி, ஒரியா, படுகா உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்தி, தெலுங்கு, கன்னடம் என 12 மொழிகளில் 7000 பாடல்களைப் ஸ்வர்ணலதா பாடியிருக்கிறார். அவரது தனித்தன்மை வாய்ந்த குரல் எவரையும் கட்டிப்போடும்.
மொஹல் ஏ ஆசம் படம் 1950 களில் வெளி வந்த படம், அது அனார்கலி என்கிற பெயரில் தமிழில் வெளியானபோது, ஷம்ஷாத் பேகமும், லதாமங்கேஷ்கரும் பாடிய புகழ்பெற்ற கவாலி பாடலை இரு குரலிலும் இவரே பாடினார். இதைப்பார்த்து பிரமித்த பிரபல இசையமைப்பாளர் நவ்ஷாத் தென் இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பாராட்டினார்.
இளம் வயதில் குறுகிய காலத்தில் இசையுலகின் உச்சத்தில் அனைத்து மொழி இசையமைப்பாளர்களின் விருப்ப பாடகியாக மாறியிருந்த ஸ்வர்ணலதா நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி சென்னையில் 2010 ஆம் ஆண்டு காலமானார். அப்போது அவருக்கு வயது 37.
ஸ்வர்ணலதாவின் பிறந்த நாள் இன்று காலங்கள் கடந்தாலும் அவரது “மாலையில் யாரோ மனதோடு பேச” பாடல் மூலம் நம்மிடம் பேசிக்கொண்டுத்தான் இருக்கிறார்.