Tap to Read ➤

'ஓ மை டாக்' மினி விமர்சனம்

மூன்று தலைமுறை ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம், ஓ மை டாக். விஜயகுமார், அருண்விஜய் அவரது மகன் அர்னவ் விஜய் என மூவரும் நடித்துள்ளனர். இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாகும்.
ஜோதிகா-சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள தரமான படம் ஓ மை டாக்
குழந்தைகளின் மெல்லிய உணர்வைச் சொல்லும் ஓ மை டாக் இன்று ஓடிடியில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
தாத்தா விஜயகுமார், மகன் அருண் விஜய், பேரன் அர்னவ் விஜய் மூவரும் அதே பாத்திரத்தில் நடித்துள்ளனர், தாயாக மஹிமா நம்பியார், மிரட்டல் வில்லனாக வினய் ராய், பானுசந்தர். உடன் சிம்பா நாய்க்குட்டியும் நடித்துள்ளது.
சரோவ் சண்முகம் இப்படத்தை இயக்கியுள்ளார். நாய்க்குட்டி, சிறுவர்களை வைத்து இயக்குவது கடினமான வேலை அதை செய்துகாட்டியுள்ளார். அர்னவ் விஜய் முதல் படம் என்பது போல் தெரியவில்லை அப்படி நடித்துள்ளார்.
மிகபெரும் பணக்காரரான வினய்ராய் நாய்களை வளர்ப்பதிலும் போட்டிகளில் கலந்துக்கொள்வதிலும் வெறித்தனமான விருப்பம் உள்ளவர். 101 டால்பின் நாய் வில்லி போன்ற காஸ்ட்யூம் அவருக்கு.
அடுத்த போட்டியில் வென்றால் உலக சாதனை என்று நாய்க்குட்டிகளை தேர்வு செய்யும் போது ஒரு குட்டி பார்வையற்ற குட்டியாக இருப்பதால் கொல்லச் சொல்லி வேலைக்காரர்களிடம் கொடுக்க அது தப்பி சிறுவன் அர்னவ் விஜய்யிடம் அடைக்கலம் ஆகிறது.
கண் தெரியாத நாய்க்கு அறுவை சிகிச்சை செய்ய 2 லட்ச ரூபாய் தேவைப்பட அதற்காக சிறுவனும் அவரது நண்பர்களும் பணம் சேர்ப்பதும் இடையில் நாயைக்கொல்ல பணக்காரரின் ஆட்கள் நாயைக்கடத்துவதும் சுவாரஸ்யமாக இருக்கும்.
சிறுவனின் அன்பால் மருத்துவர் நாய்க்கு ஆபரேஷன் செய்து குணமாக்க நாயுடன் போட்டிக்கு தயாராகிறான் அர்னவ் விஜய். இதையறிந்த பணக்காரர் வினய்யின் கோபத்திற்கு ஆளாகி அருண் விஜய் படும் கஷ்டம் படத்தின் பின் பாதி கதை.
நாயுடன் போட்டியில் கலந்துக்கொள்ளும் சிறுவன் வெல்கிறானா? பணக்காரர் கோபம் என்ன ஆகிறது, என்பதே மீதிக்கதை. அழகாக நகர்த்தி சுபமாக முடித்துள்ளார்கள்.
ஆடம்பரமான அதிரடி படங்களுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டமில்லாமல் அன்பை பிரதானமாக வைத்து எடுக்கப்பட்ட படம் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம், குழந்தைகளுக்கு விருப்பமான படம்.
படத்தில் மைனஸ் என்று பார்த்தால் அழுத்தமான காட்சிகள் இல்லாததும், சில இடங்களில் இந்தக்காட்சிகளை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்று ஆங்கிலப்பட தழுவல் போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டதை சொல்லலாம்.
இசை நிவாஸ் கே.பிரசன்னா மெல்லியதாக வருடுகிறது. கேமராமேன் கோபிநாத்தை பாராட்ட வேண்டும், நாய்க்குட்டிகளையும், குழந்தைகளையும் இயல்பாக காட்டியுள்ளார்.