Tap to Read ➤

போதைப்பழக்கத்தில் சிக்கி மீண்ட ஹாலிவுட் நடிகர் அயர்ன் மேன்

வாழ்க்கையில் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி மீண்ட நடிகர் பின் நாளில் மிகச்சிறந்த படங்களான சாப்ளின், அயர்ன் மேன் போன்ற படங்களில் நடித்து பிரபலமாக உள்ளார்.
மார்வெல் அயர்மேன் வரிசைப் படங்கள் மூலம் பிரபலமானவர் ராபர்ட் டவுனி ஜூனியர்
இவர் இரண்டாம் தலைமுறை சினிமாத்துறை சார்ந்தவர் இவரது தந்தை டவுனி சீனியர் பட இயக்குநர் ஆவார். ஹாலிவுட் ஹீரோவாக வித்தியாச நடிப்பில் கலக்கும் ’அயர்ன் மேன்’ டவுனி ஜூனியர் உலக பிரபலம்.
சார்லி சாப்ளின் பயோபிக்கில் சார்லி சாப்ளினாகவே வாழ்ந்த ஹாலிவுட் நடிகர் டவுனி ஜூனியர் அயர்ன் மேன் படத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ்சாக 11 படங்களில் நடித்துள்ளார்.
ஹாலிவுட்டில் கிடைத்த பாத்திரத்தை தன்னுடைய தனித்துவமான நடிப்பால் வித்தியாசப்படுத்தி காட்டும் நடிகர்களில் டவுனி ஜூனியர் முக்கியமானவர்.
முதன் முதலில் 1970 அவரது தந்தை இயக்கிய படத்தில் குழந்தை நட்சத்திரமாக ராபர்ட் டவுனி ஜூனியர் நடித்துள்ளார்.
அதன் பின்னர் பல படங்களில் நடித்தும் பெரிதாக பேசப்படவில்லை. அவர் பிரபலமான படம் 1992 ஆம் ஆண்டு சாப்ளின் என்கிற சார்லி சாப்ளின் பயோபிக் படத்தின் மூலம் பிரபலமானார். அந்தப்படத்திற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
புகழ் உச்சியில் இருந்தபோது கொகைன் உள்ளிட்ட போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் காரணமாக கைதாகி பட வாய்ப்புகள் பறிபோனது. பின்னர் கைதாகி மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைப்பெற்று தேறினார்.
2003 ஆம் ஆண்டில் மீண்டும் புத்தம் புது மனிதராக சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பிரபல ஹாலிவுட் நடிகர் மெல்கிப்சன் இவருக்காக உதவியதால் மீண்டும் வாய்ப்பு பெற்றார்.
கிஸ்கிஸ் பேங்பேங் என்கிற படம் மூலம் பிரபலமானார். அடுத்தடுத்து ஜோடியாக், ட்ராபிக் தண்டர் உள்ளிட்ட படங்கள் சிறப்பாக ஓடியது.
ட்ராபிக் தண்டர் படத்தில் அவர் கருப்பின இளைஞராகவே நடித்திருப்பார். அவரை படபிடிபிடிப்பில் யாரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு மேக்கப் இருந்தது. இந்தப்படத்துக்காக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
அதன் பின்னர் அவரை உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்தப்படம் அயர்ன் மேன். இந்தப்படத்தில் டாம் குரூஸ் நடிக்கவேண்டியது, ஆனால் மிஷன் இம்பாசிபிள் படத்தில் பிசியாக இருந்ததால் ராபர்ட் டவுனி ஜூனியருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அயர்ன் மேன் படத்தின் அத்தனை பாகங்களிலும் டவுனி ஜூனியர் அயர்ன் மேனாகவே வாழ்ந்திருப்பார். ரசிகர்கள் மனதில் அயர்ன் மேன் என்றால் அது டவுனி ஜூனியர் என பதிய வைத்துவிட்டார்.
அயர்ன் மேனாக 11 படங்களில் டவுனி ஜூனியர் நடித்துள்ளார். இதே போல் வேறு யாரும் நடித்திருப்பார்களா? என்றால் சாத்தியமே இல்லை.
1992 ஆம் ஆண்டு அமெரிக்க பாடகியுடன் திருமணமான நிலையில் 2004 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு சூசன் டவுனி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
துப்பறியும் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ் படமாக்கப்பட்டபோது முதல் ஷெர்லாக் ஹோம்ஸ் டவுனி ஜூனியர்தான்.
கடைசியாக டவுனி ஜூனியர் நடித்துள்ள படம் ’டூலிட்டில்’. அடுத்து கிருஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் ஆஃபன் ஹைமர் என்கிற படத்தில் மிகப்பெரிய அணு விஞ்ஞானியாக நடிக்கிறார்.
முதல் தடவை அயர்ன் மேன் பாத்திரத்தில் டாம்குரூஸ் நடிப்பதாக தகவல் வெளியானது. அயர்ன் மேனா டவுனி ஜூனியரை பார்த்தவர்கள் டாம் குரூஸை ஏற்றுக்கொள்வார்களா? என்கிற வாதமும் எழுந்துள்ளது.
தான் நடிக்கும் படங்களில் இயக்குநர் சொன்னதை மீறி சின்ன சின்ன பாடி லேங்குவேஜ், செயல்கள் மூலம் அந்த காட்சிக்கு மெருகூட்டிவிடும் பழக்கம் டவுனி ஜூனியருக்கு உண்டு.
டவுனி ஜூனியருக்கு அடிக்கடி சாப்பிடும் பழக்கம் உண்டு. காட்சி நடிக்கும் போது இவராக உணவுத்தட்டை எடுத்து சாப்பிட்டுக்கொண்டே, மற்றவர்களுக்கும் கொடுத்துள்ளார். அவர்களும் சாப்பிட்டப்படி நடித்துள்ளனர். இதுபோல் பல படங்களில் நடந்துள்ளது.
டவுனி ஜூனியர் நடிக்கும் காட்சிகள் இந்தியாவில் புகழ்பெற்ற நடிகர் புற்று நோயால் சமீபத்தில் மறைந்த இர்ஃபான் கான் சாயலில் இருப்பதை பலர் சுட்டி காட்டியிருப்பார்கள்.
பல காட்சிகளில் டவுனி ஜூனியர் இயல்பாக காட்சியில் இல்லாததை செய்யும் போது உடன் நடிப்பவர்கள் தடுமாறி பின்னர் நடிப்பார்கள். அது படத்தில் காமெடி காட்சியாக அமைந்துள்ளது.
டவுனி ஜூனியரின் இயல்பான நடிப்பு, ஏற்றப்பாத்திரத்திற்கு ஏற்ப பொருந்துவது, அவருக்கு ஹாலிவுட் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுத்தந்துள்ளது.