Tap to Read ➤

'தளபதி 67' மீண்டும் விஜய் - லோகேஷ் கூட்டணி

நடிகர் விஜய்-ன் 67வது படத்தினை இயக்குனர் லோகேஷ் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பற்றிய விவரங்கள் இங்கு உள்ளன.
மாநகரம் படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர் என பல வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தினை பெற்றுள்ளார்.
இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம், மாஸ்டர். இப்படத்தில் விஜய் நாயகனாக நடித்திருந்தார்.
லோகேஷ் இயக்கத்தில் தற்போது கமல்ஹாசன் நடித்திருக்கும் 'விக்ரம்' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது.
இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 திரைப்படம் உருவாகவுள்ளது.
தளபதி 67 படத்தினை தயாரிப்பாளர் லலித் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
தளபதி 67 படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
'தளபதி 67' கூட்டணியை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது