Tap to Read ➤

ஆஸ்கர் நாயகன்...யார் இந்த வில் ஸ்மித் / Oscar hero...Who is Will Smith

ஆஸ்கர் நாயகன்...யார் இந்த வில் ஸ்மித் / Oscar hero...Who is Will Smith
ஹாலிவுட் திரையுலகில் பன்முக திறமைப்பெற்ற நடிகர் வில் ஸ்மித். பாடகர், இசையப்பாளர் என பல துறைகளில் சாதனையாளர், அதற்காக விருதுகள் பெற்றவர்.
முதன்முறையாக ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளார். மனைவியை பிரிந்து வாழ்ந்தாலும் மனைவி பற்றி விமர்சித்தவரை தாக்கியதன் மூலம் ஆதரவு, எதிர்ப்பு கருத்துகளை பெற்றுள்ளார்.
ஆஸ்கர் தவிர, கிளிண்ட் ஈஸ்ட் வுட் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் வாங்கிய அமெரிக்காவின் தேசிய விருதான Honorary César விருதை 2005 ஆம் ஆண்டு பெற்றார்.
1968 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி அமெரிக்கா பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்தவர். சிறந்த ராப் பாடகர் சொந்தமாக 20 க்கும் மேற்பட்ட ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.
திரையுலகத்திற்கு வரும் முன் 1990-96 வரை ‘தி ஃப்ரெஷ் பிரின்ஸ் ஆஃப் பெல்-ஏர்’ என்கிற டிவி தொடரில் நடித்து பிரபலமானார். 1992 ஆம் ஆண்டு திரையுலகிலும் கால் பதித்தார்.
முதல் படம் 1992 ஆம் ஆண்டு வேர் த டே டேக்ஸ் யூ (Where The Day Takes You), அடுத்தடுத்த ஆண்டுகளில் பேட் பாய்ஸ் (Bad Boys), 1996: இன்டிபென்டென்ஸ் டே (Independence Day), மென் இன் பிளாக் (Men In Black) போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
ஸ்மித் 1992 இல் ஷெரி ஜாம்பினோவை என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 1995 இல் மனைவியை விவாகரத்து செய்தார். பின்னர் 1997 இல் நடிகை ஜடா கோரன் பிங்கெட்டை மணந்தார். இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இருவருமே ஸ்மித்துடன் திரைப்படங்களில் நடித்துள்ளனர். ஜடா கோரன் பிங்கெட் -ஸ்மித் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
ஜடா கோரன் பிங்கெட் முடி கொட்டுதல் பிரச்சினையில் உள்ளார். இதை நகைச்சுவை நடிகர் மார்க் கிண்டலடித்ததே ஸ்மித் தாக்கியதற்கு காரணம்.
ஸ்மித் நடித்த எம்.ஐ.பி 3 பாகங்கள், பேட்பாய்ஸ் 3 பாகங்கள், ஹாங் ஒவர், ஐ ரோபோட், அலி, அலாவுதீன், ஹாங் ஓவர், தி லெஜண்ட், ரிச்சர்ட் என பல படங்கள் உலகப்புகழ் பெற்றவை.
2021 ஆம் ஆண்டு வெளியான கிங் ரிச்சர்டு (‘King Richard’) டென்னீஸ் சாம்பியன் வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தை கதையை எடுத்தப்படம். வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் அவார்டை பெற்றுத்தந்தது.