Tap to Read ➤

இந்த வார விடுமுறைக்காக கண்டுகளிக்க ஓடிடி/திரையரங்கில் ரிலீஸ் படங்கள்

இந்தவார விடுமுறையில் கண்டுகளிக்க ஓடிடி தளத்தின் புதிய வரவுகள், திரையரங்கில் வெளியாகியுள்ள படங்கள் வருமாறு.
Filmibeat Tamil
இந்தவாரம் திரையில் 5 படங்களுக்கு மேல் வெளியாகியுள்ளது. அதில் போனவாரம் வந்த லவ் டுடே படம் சிறப்பாக உள்ளதாக அனைவரிடமும் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.
அடுத்து அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகியுள்ள நித்தம் ஒரு வானம் படம் கொங்குதமிழில் அசோக் செல்வன் பேசி நடித்துள்ளார்.
அடுத்து சமந்தாவின் யசோதா படம் வெளியாகியுள்ளது. இந்தப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்து வெளியாகியுள்ள படங்கள் பரோல், மிரள் இவைகளை திரையரங்கில் கண்டுகளிக்கலாம்.
ஹாலிவுட் பிரியர்களுக்காக வந்துள்ள படம் பிளாக் பாந்தர்-வகாண்டா ஃபார் எவர் மார்வெல் மூவீஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம். 2018 ஆம் ஆண்டு வெளியான படத்தின் தொடர்ச்சி.
மலையாள ரசிகர்களுக்காக ஜெயஜெயஜெயஜேயஹே படம் வெளியாகியுள்ளது. பசில் ஜோசப் நடித்தப் படம்.
முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்கிற் மலையாளப்படம் வினித் சீனிவாசன், சூராஜ் வெஞ்சரமோடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தியில் அமிதாப் நடிப்பில் உஞ்சாயி (உயரம்) என்கிற படம் வெளியாகியுள்ளது.
நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று திரையரங்கில் வெளியானது. இந்தப்படம் த இத்திரைப்படத்தை அமேசான் ப்ரைமில் பார்க்கலாம்.
சினம்..அருண் விஜய்யின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ’சினம்’ திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் நெட்பிளிக்ஸ்-ல் வெளியாகியுள்ளது.
பிஸ்தா, மெட்ரோ சிரிஷ், சதீஷ், யோகி பாபு, மிருதுளா ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் பிஸ்தா. நகைச்சுவைத் திரைப்படமான இது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
Rorschach (மலையாளம்), மம்மூட்டி, பிந்து பணிக்கர் ஆகியோர் நடித்து நிஸாம் பஷீர் இயக்கியிருக்கும் படம் ராட்சசா. ஒரு சைக்கோ த்ரில்லர் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளிவந்துள்ளது.
குரு சிஷ்யரு (கன்னடம்) கோ கோ விளையாட்டை மையமாக வைத்து உருவானத் திரைப்படம் குரு சிஷ்யரு. இந்தப்படம் நேற்று முதல் ஓடிடி தளத்தில் ஜீ.5-ல் வெளியாகியுள்ளது.
’மோனிகா ஓ மை டார்லிங்’ ..ராஜ்குமார் ராவ், ராதிகா ஆப்தே, ஹுமா குரேஷி மற்றும் சிக்கந்தர் கெர் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் நெட்ஃபிக்ஸில் பார்க்கலாம்.
பத்தோன்பதாம் நோட்டாண்டு (மலையாளம்), விநாயன் இயக்கத்தில் உருவான மலையாளத் திரைப்படம் பத்தோன்பதாம் நோட்டண்டு. செப்டம்பர் 8 ஆம் தேதி திரையில் வெளியான இப்படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.