Tap to Read ➤

பி.சுசிலா மூன்று தலைமுறை கண்ட இசை ஆளுமை..86 வது பிறந்த நாள்

தமிழ் திரையுலகில் மூன்று தலைமுறை மக்களை தன் வசீகர குரலால் கவர்ந்த பி.சுசீலாவின் 86 வயதை கடந்துள்ளார்.
Filmibeat Tamil
1955 ஆம் ஆண்டு வெளியான கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் அறிமுகமாகி தமிழ் மக்கள் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் சுசீலா
5 தேசிய விருதுகளை பெற்றவர், 1990 ஆம் ஆண்டுவரை சுசீலா குரல் ஒலிக்காத படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தினார்
1950-ம் ஆண்டு கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் அறிமுகமான பி.சுசிலா-தூக்கு துக்கியில் அறிமுகமான டி.எம்.எஸ் இணை தமிழகத்தில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தினர்
டேப்ரிக்கார்டர் வராத காலக்கட்டத்தில் வானொலியில் உங்கள் விருப்பத்தில் அனைவரும் எப்போதும் கேட்கும் ஒரு வசனம் இந்த படத்துக்காக டி.எம்.சௌந்தர்ராஜன்-பி.சுசிலா பாடிய பாடல் என்றே இருக்கும்.
சுசிலா குரலில் அறிமுகமாகாத கதாநாயகிகளே இல்லை எனலாம். மன்னவனே அழலாமா என்கிற பாடல் மூலம் கே.ஆர்.விஜயா, பருவம் எனது பாடல் மூலம் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அறிமுகமானார் ஜெயலலிதா
இப்படி கதாநாயகிகளுக்கு காதல், சோகம், துள்ளல் இசைப்பாடல்களை ஆயிரக்கணக்கில் பாடி தமிழ் மக்கள் மட்டுமல்ல தென் இந்திய படங்களின் இசை அரசியாக சுசிலா விளங்கினார்
ஒரு காலத்தில் தென் இந்தியா முழுவதும் டி.எம்.எஸ், கண்டசாலா, பிபி.ஸ்ரீனிவாஸ் என அனைத்து மாநில வானொலிகளிலும் காதல், சோகம், துள்ளல் பாடலாக சுசிலாவின் குரல் ஒலித்தது
தமிழில் தாலாட்டு பாடல், கல்யாணத்தில் ஒலித்த பாடல், காதல் பாடல், காதல் தோல்வி பாடல் என தோழியாக, சகோதரியாக, உறவாக, காதலியாக பல குரல்களில் வந்து மனதை வருடிய குரல் சுசிலாவின் குரல்
தனது பாடல்களுக்காக 5 முறை சிறந்த பாடகிக்கான விருதை சுசிலா பெற்றுள்ளார். உயர்ந்த மனிதன் படத்துக்காக ”நாளை இந்த வேளைப்பார்த்து ஓடி வா நிலா” பாடலுக்காக 1968 ஆம் ஆண்டு விருது பெற்றார்
பி.சுசிலா தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் அதிக பாடல்களை பாடியுள்ளார். இதில் தெலுங்கில் 12000 பாடல்களை பாடியுள்ளார். தமிழில் 6000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்
எஸ்.பி.பி உள்ளிட்ட பலரின் அறிமுக பாடல்கள் பி.சுசிலாவுடன் இருந்துள்ளது. தமிழில் தமிழ் தாய் வாழ்த்தை டி.எம்.எஸ் உடன் சேர்ந்து சுசிலா பாடியது அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வு ஆகும்
சுசிலாவின் குரலில் இருக்கும் ஒருவகையான இனிமையும், சிறுவயதிலிருந்தே ஒவ்வொருவரும் கேட்டு வளர்ந்ததும் அவரது பாடலுக்கு இன்றும் வரவேற்பு இருப்பதற்கு காரணம் எனலாம்
72 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கடந்து இன்று சொந்தமாக அறக்கட்டளை வைத்து நலிந்த கலைஞர்களுக்கு உதவுவது, பென்ஷன் வழங்குவது என ஓய்வுக்காலத்தை அமைதியாக கழிக்கிறார் பி.சுசிலா
17000 பாடல்களுக்கு மேல் பல மொழிகளில் பாடிய பி.சுசிலாவுக்கு பிடித்த பாடல் உரிமைக்குரல் படத்தில் ஜேசுதாசுடன் சேர்ந்து பாடிய விழியே கதை எழுது பாடல் என அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்