Tap to Read ➤

தமிழ் சினிமாவின் மக்கள் மொழி பேசும் பா.ரஞ்சித்

தமிழ் சினிமாவை புதுமைக்கோணத்தில் கையாளும் படைப்பாளிகள் அவ்வப்போது வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.
தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு திருப்பமாக இயக்குநர் பா.ரஞ்சித் வருகை இருந்தது. இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பா.ரஞ்சித்.
தனது முதல் படமாக அட்டகத்தியை வித்தியாசமான அணுகுமுறையில் அனைவரையும் திரும்ப திரும்ப பார்க்கவைத்தார்.
சராசரி இளைஞன் இனக்கவர்ச்சியை காதல் என நினைத்து அல்லாடுவதை அழகாக காட்டியிருப்பார். வடை சாப்பிடுகிற கேப்பில் காதல் அடுத்த பெண்ணிடம் மாறும் காட்சி அருமை.
அடுத்து மெட்ராஸ் படம் ஒரு சுவற்றுக்காக ஈகோ பிடித்து அலையும் தலைவனால் உள்ளூர் இளைஞர்கள் வாழ்க்கை தொலைந்து போவதை காட்டியிருப்பார்.
அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார். அந்தப்படம் பெரிதாக பேசப்பட்டது. இதனால் மகிழ்ந்த ரஜினி தனது மருமகன் தனுஷுக்காக நடிக்கும் படத்தை இயக்க பா.ரஞ்சித்து வாய்ப்பு கொடுத்தார்.
பா.ரஞ்சித் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை முறையாக பயன்படுத்தினார் அவர் இயக்கிய அந்தப்படம் ரஜினியின் முக்கிய படங்களின் வர்சையில் சேர்ந்துக்கொண்டது. அந்தப்படம் ‘காலா’
காலா படத்தில் மும்பையின் தாராவியை காக்கும் தலைவனாக ரஜினியும் அதை ஆக்கிரமிக்க நினைக்கும் நானா படேகர் இருவருக்குமான மோதல் ரசிக்கும்படி இருக்கும்.
காலா படத்தில் பாடல்கள், கதை, காட்சி, ஆர்ட் டைரக்‌ஷன் என அத்தனையும் சிறப்பாக இருந்தது. சந்தோஷ் நாராயண் இசை, கபிலன் பாடல் சிறப்பாக இருந்தது.
காலா படத்தை இயக்கிய காலத்திலேயே அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு தனது நீலம் ப்ரொடக்‌ஷன் மூலம் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்து வாய்ப்புக்கொடுத்தார்.
அடுத்து சார்பட்டா பரம்பரை எனும் படத்தை மிகுந்த பிரயாசையுடன் எடுத்து அளித்தார். 1970 காலக்கட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.
வடச்சென்னையின் பாக்சிங் குழுக்கள் பற்றிய ஆய்வுடன் கூடிய படத்தைல் ஆர்யா, பசுபதி, ஜான் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் பாத்திரங்களாகவே மாறிவிட்டார்கள்.
படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் பெரும் வரவேற்பை பெற்றது. கபிலன், ரங்கன் வாத்தியார், டாடி, வேம்புலி, டான்சிங் ரோஜா பாத்திரங்கள் பேசப்பட்டன.
அடுத்து நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் குதிரைவால் எனும் வித்தியாசமான கதையமைப்பு கொண்ட படத்தை தயாரித்தார். அது திரையரங்குளில் 3 வது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டைக்கத்தி தினேஷும் இணைகின்றனர். பேபி என அப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஊர்வசி, லொல்லு சபா மாறன் ஆகியோர் உள்ளதால் இது முழு நீள நகைச்சுவை படமாக இருக்கலாம்.
திரைப்படத்தை சமுதாயக்கண்ணோட்டத்தோடு அணுகும் இயக்குநர்களில் பா.ரஞ்சித் ஒருவர் இவர் ஆண்டுதோறும் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் முற்போக்கு சிந்தனை படங்களை திரையிட்டு ஆய்வு செய்கிறார்.
இந்த ஆண்டும் சென்னை வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத் திருவிழா 3 நாட்கள் நடந்தது.