Tap to Read ➤

பான் இந்தியா படங்களும் தென் இந்திய இயக்குநர்களும்

என்னதான் பான் இந்தியா படங்கள் என பெருமை பேசினாலும் பாலிவுட்டை தாண்டி மணிரத்னம், ஷங்கர், ராஜமவுலி, நீல்சன், சுகுமார் போன்ற தென் இந்தியர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
பான் இந்தியா மூவிக்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளிள் அம்மாநில கலைஞர்கள் பங்கேற்புடன் வெளியாகும் படங்களை பான் இந்தியா படங்கள் என்கின்றனர்.
பான் இந்தியா ஸ்டார்கள் என தற்போது யாஷ், ராம்சரண், ஜூனியர் என்டிஆர், பிரபாஸ், அல்லு அர்ஜுன், விஜய் உள்ளிட்டோர் கொண்டாடப்படுகின்றனர்.
ஆனால் பான் இந்தியா ஸ்டார் என்றால் ரஜினி, கமல் தான் கோலிவுட்தான் முதல் பான் ஸ்டார்களை தந்தது என்கின்றனர்.
பான் இந்தியா மூவிக்களின் ஆரம்பகால இயக்குநர் என்றால் முதலில் மணிரத்னத்தையும் அடுத்து கமல், கே.விஸ்வநாத், சங்கர் உள்ளிட்டோரை சொல்லலாம்.
ஒரே படம் பல மொழிகளில் எடுக்கப்பட்டு வெளியாவதை பான் இந்தியா மூவி என்கின்றனர். ஆனால் இதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று விமர்சித்துள்ளார் துல்கர் சல்மான்.
ஒரு படம் அம்மாநில மக்களின் மொழி, கலாச்சாரம், வாழ்க்கைமுறை சார்ந்து இருக்கவேண்டும், அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து எடுக்கப்படும் பான் இந்தியா படத்தில் அது இருக்காது என்கிறார் அவர்.
இந்தியாவில் முதல் பான் இந்தியா படம் என்றால் எஸ்.எஸ்.வாசன் 1948 ஆம் ஆண்டு எடுத்த சந்திரலேகா படமே. தமிழ், இந்தி மொழியில் எடுக்கப்பட்டு பின்னர் ஆங்கிலம், டேனிஷ், ஜப்பான் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
அடுத்த பான் இந்தியா படம் என்றால் 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மைடியர் குட்டி சாத்தான் படம் தான். இது இந்தியாவின் முதல் 3 டி படமாகும்.
பான் இந்தியாவின் இயக்குநர் என்றால் மணி ரத்னத்தை சொல்லலாம் அவர் எடுத்த நாயகன், பம்பாய் படங்கள் இதற்கு சாட்சி 
 பான் இந்தியா படங்களின் நாயகன் கமல் எனலாம். அவர் நடித்த நாயகன், புஷ்பக், ஆளவந்தான், தசாவதாரம், அவர் இயக்கிய ஹேராம், உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.
அதன் பின்னர் ரஜினியின் எந்திரன், 2.0 படங்கள் ஆகும். அந்த படங்களையும் இயக்கியது சங்கர்.
பான் இந்தியா என பெருமையுடன் குறிப்பிட்டாலும் இந்தியாவின் பெரிய பட உலகமான பாலிவுட்டுக்கு சவால் விடுப்பது தென் இந்திய இயக்குநர்களே.
பாகுபலி, புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப்-2, பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் பான் இந்தியா படங்களே. இவைகளில் பீஸ்ட் தவிர அனைத்தும் மெகா ஹிட்.
தற்போது இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார், இது தமிழ் இயக்குநர் இயக்கும் பான் இந்தியா மூவி ஆகும்.