Tap to Read ➤

வேகம்..சீறல்..வேகமாய் வாழ்க்கையை முடித்துக்கொண்ட பால்வால்கர்

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தில் நம் உள்ளங்களை கொள்ளைக்கொண்ட நாயகன் பால் வால்கர் 40 வயதில் விபத்தில் மறைந்து நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
Filmibeat Tamil
"If one day the speed kills me, do not cry I because I was smiling." வேகம் ஒரு நாள் என்னை கொன்றால் அதற்காக அழாதீர்கள், காரணம் நான் சந்தோஷமாக இருப்பேன். இது பால் வால்கரின் முக்கியமான தத்துவங்களில் ஒன்று.
அவர் சொன்னது போலவே மிக வேகம் அவரது உயிரைப்பறித்தது. அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி தீப்பிடித்ததில் நண்பருடன் பால்வால்கர் உயிரிழந்தார்.
1973 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கலிஃபோர்னியாவில் பிறந்த பால்வால்கர் பள்ளி படிப்பை முடித்தவர் கல்லூரி படிப்பில் மெரைன் கடல் சம்பந்தமான படிப்பை முடித்தார்.
1985 ஆம் ஆண்டு முதல் நடிக்கத்தொடங்கினார். டிவி சீரியல்கள் என தொடங்கியது அவரது வாழ்க்கை. வெர்சிட்ய் ப்ளூ, ஜாய் ரைடு உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தார்.
ஆனாலும் அவரது வாழ்க்கையை திருப்பி போட்டது 2001 ஆம் ஆண்டு வின் டீசலுடன் இணைந்து நடித்த ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படமே.ping...
அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து 2003 ல் 2 ஃபாஸ்ட் 2 ஃபியூரியஸ் மூவி வெளியானது.
பின்னர் தொடர்ச்சியாக 2006, 2009, 2011, 2013 4 பாகங்களிலும் வின் டீசல், பால்வால்கர் குழுவினர் நடித்தனர். பால்வால்கர் புகழின் உச்சிக்கு சென்றார்.
இதற்கு அடுத்து ஃபாஸ்ட் &ஃபியூரியஸ் 7 2013 ஆம் ஆண்டு படபிடிப்பு தொடங்கி நடந்தது. இந்த நேரத்தில் தான் 2013 நவம்பர் 30 அன்று கார் விபத்தில் பால் வால்கர் உயிரிழந்தார்.
பால் வால்கர் மறைந்ததால் அவரது பார்ட் மீண்டும் திருத்தப்பட்டு மீதியுள்ள காட்சிகள் அவரது சகோதரர்கள் கேலப், கோடி வால்கரை வைத்து மீதி பாகங்கள் முடிக்கப்பட்டது.
பால்வால்கர் தனது சம்பாத்தியத்தில் பெரும்பகுதி கார்கள் வாங்குவதில் ஆசையுள்ளவர். அவரிடம் பழங்கால மற்றும் விலை உயர்ந்த 30 க்கும் மேற்பட்ட கார்கள் இருந்தன.
தத்துவப்பிரியரான பால் வால்கர் வாழ்க்கையைப்பற்றி பல விஷயங்களை தத்துவங்களாக சொல்லியிருக்கிறார். ”வாழ்க்கையில், நல்லது, கெட்டதாக எது இருந்தாலும் சரி, ஒவ்வொரு காலையிலும் எழுந்திருங்கள், உங்களுக்கு ஏதேனும் ஒன்று உள்ளது”.
அவர் சம்பாத்தியத்தில் பல நல்ல காரியங்கள் செய்துள்ளார். 2011 ஹைதி பேரிடரில் தனது குழுவினரை அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ, நிவாரண உதவிகள் வழங்கினார்.
2013 ஆம் ஆண்டு தான் உயிரிழக்கும் முன் அவர் நண்பருடன் போர்ச்சே காரில் சென்றது 2013 பால் வால்கர் சாரிட்டி நடத்தும் டைபூன் புயல் நிவாரண நிகழ்ச்சிக்கு தான் சென்றுக்கொண்டிருந்தார்.
பால் வால்கருக்கு மிகவும் பிடித்த கார் போர்க்‌ஷே. அவரிடம் இல்லாத கார்களே இல்லை எனலாம் ஆனாலும் அந்த காரைத்தான் விரும்பினார். அவர் உயிரை பறித்ததும் விருப்பமான போர்க்‌ஷே கார்தான் என்பது சோகமான ஒன்று.