Tap to Read ➤

பொல்லாதவன் 15 ஆண்டு..ஹாட்ரிக் அடித்த தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி

சாதாரண காதல் செய்யும் இளைஞராக நடித்து வந்த தனுஷ் ஒரு வித்தியாசமான படத்தில் நடித்து புகழ் பெற்றார். அந்த படம் பொல்லாதவன். தனுஷ் வெற்றிமாறனின் வெற்றிக்கூட்டணியின் ஆடுகளம், அசுரன் படம் இருவருக்கும் தேசிய விருதை பெற்றுத் தந்தது.
Filmibeat Tamil
ஹீரோ என்றால் பர்சானலிட்டி வேண்டும்,கலர்,முக அழகு,ஹேர் ஸ்டைல் உள்ளிட்டவை கவனிக்கபட்ட வந்த காலத்தில் அவை அத்தனையும் உடைத்து மாற்றத்தை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த்.
அதை எல்லாம் தாண்டி ஹீரோவுக்கு சம்பந்தம் இல்லாமல் சிறுவனாக ஒருவர் நடிக்க வந்தார். பள்ளி பருவத்து காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் 2002 ஆம் ஆண்டு தனுஷ் அறிமுகமானார்.
Start typing..அப்போது பலர் அவரை கிண்டல் அடித்தனர். அவர் நடித்த படங்கள் அனைத்தும் சுள்ளான், திருடா திருடி என படங்கள் நடித்து பெரிதாக பேசப்படாமல் இருந்தார்.
தனுஷ் முதன்முறையாக அண்ணன் செல்வ ராகவன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு புதுப்பேட்டை என்கிற படத்தில் நடித்தார். இந்த படம் தனுஷுக்கு ஒரு திருப்புமுறையாக அமைந்தது.
இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா-முத்துக்குமார் கூட்டணியில் அருமையான பாடல்களும், வித்தியாசமான கதை, தனுஷின் வித்தியாசமான நடிப்பு மிகப்பெரிய வெற்றியை தந்தது.
அதுவரை உள்ளே இருந்த புதிய தனுஷ் வெளியே வந்தார். வலுவான ரோல்களையும் தனுஷால் செய்ய முடியும் என்ன ரசிகர்கள் நம்ப ஆரம்பித்தனர்.
புதுப்பேட்டையில் கிடைத்த நட்பு தனுஷ் வெற்றிமாறனின் திறமையை அங்கீகரிக்க ஆரம்பித்தார். இந்தக்கூட்டணி 2007 ஆம் ஆண்டு உருவாக்கிய படம் தான் பொல்லாதவன்.
புதுப்பேட்டை படத்திலேயே தனுஷ் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிமாறனின் திறமையை அறிந்துக்கொண்டார். தனுஷ் தனது படத்துக்கு ஏற்ற நாயகன் என முடிவு செய்த வெற்றிமாறன் தனுஷிடம் கதை சொல்ல உருவான படம் தான் பொல்லாதவன்.
சாதாரண ஆசா பாசம் கொண்ட இளைஞன் சூழ்நிலை காரணமாக தன்னுடைய மோட்டார் பைக்கை இழக்க அதன் பின்னர் ரவுடி கும்பலுடன் மோதும் நிலை ஏற்படுவதையும், அதனால் அவனது குடும்பம் பாதிக்கப்படுவதையும் யதார்த்தமாக எடுத்திருப்பார் வெற்றிமாறன்.
பொல்லாதவன் இருவருக்குமே திருப்புமுனையை ஏற்படுத்திய படம் எனலாம். இந்தப்படத்தில் தனுஷ் பல்சர் பைக் ஒன்றை ஆசையாக வாங்குவார். ரவுடிகளுக்குள் நடக்கும் மோதலில் அவரது பைக்கை திருடிவிடுவார்கள். பின்னர் ரவுடிகும்பலுடன் மோதல் என வாழ்க்கையே தடம் புரளும்.
இந்தப்படம் வந்த நேரத்தில் தனுஷ் ஓட்டிய பல்சர் பைக் மாடல் இளைஞர்களின் வாகனமாக மாறியது. அந்த நேரத்தில் அந்த பைக்கை வாங்கிக்கொண்டு இளைஞர்கள் சுற்ற ஆரம்பித்தனர். அந்த அளவுக்கு அழுத்தமாக மோட்டார் பைக் படத்தின் கதையோடு பின்னப்பட்டிருக்கும்.
இந்தப்படத்தின் மூலம் பாலுமகேந்திராவின் சிஷ்யர், செல்வராகவனின் உதவி இயக்குநர், வெற்றிமாறன் எனும் மிகப்பெரிய இயக்குநர் தமிழ் திரையுலகிற்கு கிடைத்தார். அதன் பின்னர் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி 2 தேசிய விருதுகளை பெற்றது.
பொல்லாதவன் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. பொல்லாதவன் படத்துக்கு பின் ஏகப்பட்ட மாற்றங்கள். தன்னால் அழுத்தமான ரோல்களை நடிக்க முடியும் என வடசென்னை, அசுரன், கர்ணன் போன்ற படம் மூலம் நிரூபித்தார் தனுஷ்.
2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் கூட்டணியில் ஆடுகளம் படத்தை தந்தார், அடுத்து 2018 ஆம் ஆண்டு வடசென்னை எனும் படம் வடசென்னை ரவுடிகள் பற்றிய படம். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.