Tap to Read ➤

பொன்னியின் செல்வன் படம் சுவாரஸ்ய தகவல்கள்

பொன்னியின் செல்வன் படம் செப்.30 தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில் சுவாரஸ்ய தகவல்கள் வருமாறு.
Filmibeat Tamil
பொன்னியின் செல்வன் படம் பல எம்ஜிஆர், கமல் என ஆளுமைகளின் கனவு. ஆனால் அதை முடித்து வைத்தது மணிரத்னம்
முதல் பாகம் இரண்டாம் இரண்டையும் ஒரே மூச்சில் 150 நாட்களுக்குள் முடித்துவிட்டார் மணிரத்னம். இதை கேள்விப்பட்டு பாகுபலி இயக்குநர் ராஜமவுலி ஆச்சர்யப்பட்டு போனாராம்.
படத்தின் திரைக்கதையை உருவாக்குவது சிரமமான ஒன்று. எம்ஜிஆரால் மகேந்திரனிடம் 1960 களில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு முடியாமல் போனது. தற்போது ஜெயமோகன் அதை சாத்தியமாக்கியுள்ளார்
பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய பாத்திரம் வந்திய தேவன் இதில் நடிக்க ஆசைப்பட்ட பிரபலங்கள் எம்ஜிஆர்,கமல் பரிந்துரைக்கப்பட்டவர் ரஜினி, போட்டோஷூட் நடத்தப்பட்டது விஜய்க்கு
அடுத்த முக்கியமான பாத்திரம் அருண்மொழி வர்மன். இதில் நடிக்க ஒரு காலத்தில் ஜெமினி கணேசன் பின் சிவகுமாரை தான் தேர்வு செய்து வைத்திருந்ததாக எம்.ஜி.ஆர் 1980 ஆம் ஆண்டு ஒரு விழாவில் பேசினார். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து போட்டோ ஷூட் நடத்தப்பட்டது
இதேபோல் நந்தினி வேடத்தில் பத்மினி தேர்வு செய்யப்பட்டிருந்தார், இதற்கு முன் பாலிவுட் நடிகை ரேகாவை முடிவு செய்து வைத்திருந்ததாக மணிரத்னம் தெரிவித்திருந்தார்
தற்போது பழுவேட்டரையர் ரோலில் சரத்குமார் நடித்துள்ளார். அந்த ரோலையாவது எனக்கு கொடுங்கன்னு தான் மணிரத்னத்திடம் கேட்டதாகவும் ஆனால் தரவில்லை என ரஜினி செல்லமாக சண்டை போட அப்புறம் உங்கள் ரசிகர்களிடம் திட்டு வாங்குவது யாருன்னு மணி திருப்பி கேட்டாராம்
வந்திய தேவன் ரோலில் நீ நடிக்காதே ரஜினியை நடிக்க வை என தான் படம் எடுப்பது பற்றி ஆலோசனை கேட்ட போது சிவாஜி கணேசன் சொன்னதாக கமல் மேடையில் தெரிவித்தார்
ஐஸ்வர்யா ராயுடன் 2 தடவை நடித்துவிட்டேன் இரண்டுமுறையும் என்னுடன் அவர் சேர்த்து வைக்கவில்லை என விக்ரம் செல்லமாக மணிரத்னத்தை கோபித்துக்கொண்டார்
சோழமன்னர் பற்றி அப்படி என்ன இருக்கு என இந்தி செய்தியாளர் கேட்க என்ன கேட்ட என அடுக்கடுக்கான தகவலை சொல்லி வெளுத்து வாங்கிவிட்டார் விக்ரம்
அதிகாலை 3 மணிக்கு எழுந்து மேக்கப் போட்டு வசனம் பேசி சாப்பாடு கூட கிடைக்கவில்லை என ஆதங்கப்பட்டார் ஜெயராம். பிரபு போல் மேடையில் மிமிக்ரியும் செய்தார்
சோழ மன்னர் வரலாற்றை கல்கி கதையாக எழுத அதை வி.எஃப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர். பாகுபலி மிகப்பெரும் மன்னர் காலத்து படம் என்றாலும் பொன்னியின் செல்வன் வரலாற்று சம்பந்தப்பட்ட படம் என்பதால் மவுசு கூடியுள்ளது
படம் வெளியாகும் முன்னரே உலகம் முழுவதும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. படத்தை லைகா ப்ரடக்‌ஷன் , மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வெளியிடுகின்றனர்.
2010 ஆம் ஆண்டுக்குப்பின் நடிப்பை நிறுத்திய ஐஸ்வர்யா ராய் தன்னை அறிமுகப்படுத்திய மணிரத்னம் அழைப்பின் பேரில் மீண்டும் நடிக்க வந்துள்ளார்
படம் முடியும் வரை ஐஸ்வர்யா ராயிடம் பேசவில்லை, சந்திப்பு இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வலிய போய் பேசவில்லை, கடைசி நாள் ஷூட்டிங்கில் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சியில் அவர் பாராட்டி பேசியதும் நான் பேச நினைத்தது எல்லாம் மறந்துப்போச்சு என்கிறார் ஜெயம் ரவி
வரலாற்று நிகழ்வை சமீப காலத்தில் படமாக்கியதில்லை, ஆகவே படமாக இல்லாமல் ஒரு வரலாற்று நிகழ்வாக இப்படத்தை பார்க்கலாம் என ரசிகர்களை கூறி வருகின்றனர்
பட ப்ரமோஷனுக்காக படத்தில் நடித்த நட்சத்திரங்கள், இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இந்தியா முழுவதும் ரசிகளை சந்தித்தனர்.