Tap to Read ➤

தமிழகத்தில் ₹200 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம், பொன்னியின் செல்வன்

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம், தமிழகத்தில் மட்டும் ₹200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
பொன்னியின் செல்வன் (PS 1) இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள தமிழர்களின் வரலாற்று திரைப்படம்.
பொன்னியின் செல்வன் என்ற நாவலை எழுத்தாளர் கல்கி எழுதியுள்ளார், கல்கி எழுதிய இந்த கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் & படக்குழு தகவல்கள்
பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் ரீதியாக உலகளவில் பல சாதனைகளை படைத்து வருகிறது.
இப்படம் தமிழ் சினிமா திரைப்படங்களில் தமிழகத்தில் மட்டும் ₹200 கோடிகள் வசூல் செய்துள்ள முதல் திரைப்படமாகும்.
உலகளவில் மிகவும் பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ள இப்படம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ₹ 127.68 cr வசூல் செய்து அசத்தியது.
இரண்டாம் வாரத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம், ₹ 56.53 cr வசூல் செய்துள்ளது.
தற்போது இப்படம் தமிழ் சினிமாவில் ₹ 207.16 cr இன்று வரை (18-10-2022) வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
உலகளவில் இன்று வரை
 (18-10-2022) ₹450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது.
ரஜினியின் 2.0 படத்திற்கு பின் அதிக வசூல் செய்துள்ள தமிழ் படம் என்ற பெருமையை இப்படம் அடைந்திருக்கிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றிய தகவல்கள்
தமிழ் சினிமா பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் அறிய மேல் நோக்கி swipe செய்யவும்