Tap to Read ➤

₹222 கோடிக்கு 'பீஸ்ட்' படத்தினை வியாபாரம் செய்துள்ளது சன் பிக்சர்ஸ்

தளபதி விஜய் நடிப்பில் 2022 ஏப்ரல் 13ல் வெளியாகும் 'பீஸ்ட்' படத்தின் வியாபார விவரங்கள் மற்றும் படம் லாபமா? நஷ்டமா? என்னும் தகவல்கள் இங்கு உள்ளது.
பீஸ்ட் திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கும் நான்காவது திரைப்படமாகும்.
பீஸ்ட் படத்திற்காக நடிகர் விஜய் 80 கோடிகள் சம்பளமாக பெற்றுள்ளார்
பீஸ்ட் படத்தின் முழு பட்ஜெட் 175 கோடிகள் ஆகும்
175 கோடிகளுக்கு தயாரிக்கப்பட்ட பீஸ்ட் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் விநியோகம் செய்து, படம் வெளியீட்டிற்கு முன்பே லாபம் அடைந்துள்ளது.
பீஸ்ட் படத்தின் தமிழ் தியேட்டர் வெளியீட்டிற்கான உரிமையை சன் நிறுவனம் ரெட் கெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் சுமார் 800 தியேட்டர்களில் வெளியிடவுள்ளது
பீஸ்ட் படத்தினை திரையரங்குகளில் வெளியிடுவது மூலம் கிடைத்த வருவாய்

 தமிழ் நாடு தியேட்டர் ரைட்ஸ் - 75 கோடிகள்

 கர்நாடகா தியேட்டர் ரைட்ஸ் - 6.3 கோடிகள்

 கேரளா தியேட்டர் ரைட்ஸ் - 5.8 கோடிகள்


தெலுங்கானா மற்றும் ஆந்திர தியேட்டர் ரைட்ஸ் - 6 கோடிகள்

 ஹிந்தி தியேட்டர் ரைட்ஸ் - 2 கோடிகள்

 'ஓவர்சீஸ்' ரைட்ஸ் - 32 கோடிகள்
பீஸ்ட் திரைப்படத்தின் செயற்கைகோள் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வைத்துள்ளது அதன் மதிப்பாக சுமார்
  40 கோடிகள் கணக்கிடப்பட்டுள்ளது
இப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி உரிமையை சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது இதற்காக 50 கோடிகள் வருவாய் ஆகும்
பீஸ்ட் படத்தின் ஆடியோ உரிமைக்கான வருவாய்
5 கோடிகள் ஆகும், இதன் உரிமையையும் சன் பிக்சர்ஸ் வசம் உள்ளது
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை படம் வெளியீட்டிற்கு முன்பே பீஸ்ட் படத்தினை 222.10 கோடிகளுக்கு வியாபாரம் செய்துள்ளது.
பீஸ்ட் படத்தின் பட்ஜெட் மற்றும் வியாபாரத்தை ஒப்பிட்டு பார்த்தால், பீஸ்ட் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சுமார்
47 கோடிகள் லாபம் பெற்று தந்துள்ளது.