Tap to Read ➤

ப்ரின்ஸ் VS சர்தார் - டபுள் ட்ரீட் தீபாவளி

சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படமும், கார்த்தியின் சர்தார் திரைப்படமும் 2022 தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
ப்ரின்ஸ் - டான் & டாக்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின் சிவகார்த்தி நடிப்பில் வெளியாகும் திரைப்படம்
சிவகார்த்திகேயன்- சத்யராஜ் - பிரேம்ஜி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ப்ரின்ஸ் படம் நகைச்சுவையாக ஒரு கலகலப்பான படமாக வெளியாகவுள்ளது.
'ஜதி ரத்னலு' என்ற படத்தினை இயக்கி விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பெரிய அளவில் பிரபலமான இயக்குனர் அனுதீப் ப்ரின்ஸ் படத்தினை இயக்கியுள்ளார்.
சர்தார் இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம்.
சர்தார் படத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடித்துள்ளார். இவருடன் ராசி கண்ணா, லைலா என பலர் நடித்துள்ளனர்.
இப்படம் அதிரடி திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஹீரோ, இரும்புத்திரை படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.
கைதி, காஸ்மோரா படங்களுக்கு பின் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கார்த்தியின் சர்தார் படம் களமிறங்குகிறது.
சிவகார்த்திகேயன் திரைவாழ்வில் வெளியாகும் முதல் தீபாவளி ரிலீஸ் படமாகும், ப்ரின்ஸ்.
இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு கதைக்களம் கொண்டு உருவாகியுள்ளது. இதில் எந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் படங்களில் இடம் பெரும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
சர்தார் படத்தின் தகவல்கள்
தகவல்கள்
ப்ரின்ஸ் படத்தின் தகவல்கள்
தகவல்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்