Tap to Read ➤

45 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வெளியான எம்ஜிஆரின் ’இன்றுபோல் என்றும்

திரைத்துறையை சிறப்பாக பயன்படுத்தி அதன் மூலம் ஆட்சியையே பிடித்தவர் எம்ஜிஆர். அவரது பேர் சொல்லிய படங்களில் இன்றுபோல் என்றும் வாழ்க 1977 மே.5 அன்று வெளிவந்தது.
எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்து தேர்தலில் நிற்கும் காலக்கட்டத்தில் ’இன்றுபோல் என்றும் வாழ்க’ படம் வந்தது.
”இது நாட்டைக்காக்கும் கை உன் வீட்டை காக்கும் கை இந்தக்கை நாட்டின் நம்பிக்கை” என்ற இந்தப்படத்தில் உள்ள பாடல் அதிமுக தேர்தல் பிரச்சாரத்திற்காக பெரிதும் பயன்பட்டது.
இது தவிர ”அன்புக்கு நான் அடிமை” பாடலும் எம்ஜிஆர் பெருமையை தேர்தலில் பேசியது. இதுகுறித்து அமெரிக்காவின் வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிக்கையே எழுதியது.
எம்ஜிஆர் தனது திரையுலக வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் திட்டமிட்டே எடுத்து வைத்தார்.
அவரது பாடல்களில் தத்துவம், வீரம், பெண்களை மதிக்கும் பாங்கு, நேர்மை, நல்ல பழக்கங்களை வலியுறுத்துவது என மக்கள் மனதில் தன் இமேஜ் குறித்த நல்லதையே விதைத்தார்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் பிறருக்கு உதவி செய்வதன் மூலம் வள்ளலாக போற்றப்பட்டார்.
திமுகவிலிருந்தவரை எம்ஜிஆரின் பிரச்சாரம் பெரிதும் திமுகவுக்கு பயன்பட்டது. எம்ஜிஆரை இதயக்கனி அதை தன் இதயத்தில் எடுத்து வைத்துக்கொண்டேன் என் அண்ணா குறிப்பிட்டார்.
எம்ஜிஆர் சுடப்பட்ட போது எழுந்த அனுதாப அலையும் திமுக 1967 ஆம் ஆண்டு வெற்றிபெற ஒரு காரணமாக அமைந்தது. அண்ணாவின் மறைவுக்குப்பின் கருணாநிதி முதல்வராக வர எம்ஜிஆர் உதவியாக இருந்தார்.
எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டப்பின் திரைப்படத்தை தனது பிரச்சாரத்துக்காக பயன்படுத்தினார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் பாடல் அதற்கு உதாரணம்.
நேற்று இன்று நாளை படத்தில் ”தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று” என்கிற பாடல் மூலம் திமுக அரசை விமர்சித்ததால் படம் வெளியாவதற்கே பிரச்சினை ஏற்பட்டது.
அதன் பின்னர் வந்த பல படங்களில் தனது பிரச்சார களமாக தன் படங்களை எம்ஜிஆர் பயன்படுத்தினார். அதில் ஒன்றுதான் இன்றுபோல் என்றும் வாழ்க படம்.
இதுபோன்று தனது பிரச்சாரத்துக்கு திரைப்படங்களையும் பயன்படுத்தி திமுகவை வீழ்த்தி எம்ஜிஆர் ஆட்சி அமைத்தார். 1977 ஆம் ஆண்டு மே.5 இன்றுதான் இப்படம் வெளியானது.