Tap to Read ➤

ஆர்.ஆர்.ஆர். மினி விமர்சனம்...பிரம்மாண்டம் அதுதான் ராஜமவுலி

ஆர்.ஆர்.ஆர். மினி விமர்சனம்...பிரம்மாண்டம் அதுதான் ராஜமவுலி
மீண்டும் கதை சொல்வதில் தான் ஒரு மாஸ்டர் என்பதை நிரூபித்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி. இந்திய சினிமாவை உலக அரங்கில் கொண்டுச்சென்றுள்ளார்.
ராம்சரண் ஒரு பக்கம் அல்லுரி சீதாராம ராஜுலுவாக மிரட்ட மறுபக்கம் கொமரம் பீமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜூனியர் என்டிஆர்.
பாகுபலி படத்தை மறந்து விட்டு ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்தால் நிச்சயம் இந்த படம் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
சிறுமியை கடத்திச் செல்லும் பிரிட்டீஷ் கும்பலிடமிருந்து சிறுமியை காப்பாற்றும் ஜூனியர் என்டிஆர் செய்யும் முயற்சிகள் ஒருபுறம்.
குழந்தையை காப்பாற்ற வரும் ஜூனியர் என்டிஆரை கைது செய்ய பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியாக ராம்சரண்
1920 களில் அதிலபாத் எனும் மாவட்டத்தில் இந்த கதை நடப்பதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
காட்டில் மிருகங்களுடன் ஜூனியர் என்டிஆரின் அட்டகாசமான என்ட்ரி ரசிகர்கள் வரவேற்பு.
போலீஸ் அதிகாரியாக வரும் ராம் சரண் என்ட்ரி லத்திசார்ஜுடன் மாஸாக ஆரம்பிக்கிறது.
பரிசலில் சிக்கிக் கொள்ளும் ஒரு சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் ற குதிரையில் வரும் ராம் மற்றும் புல்லட்டில் வரும் பீம் இருவரும் நண்பர்களாகின்றனர்.
கடத்தப்பட்ட குழந்தையை காப்பாற்ற இஸ்லாமியர் வேடமிடும் ஜூனியர் என்டிஆர் அவரை பிடிக்க வரும் அதிகாரி ராம் சரண் என்பது தெரியாமல் இருவரும் பழகுவது சுவாரஸ்யம்.
ஆங்கிலேயர்கள் இருக்கும் அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சியில் கிண்டலுக்கு ஆளாகும் பீம் ஆடும் நடனம் தான் மரண குத்து நடனம்.
ஒரு கட்டத்தில் பாம்பு ஒன்று ராம்சரணை கடித்து விட மூலிகை செடிகளை கொடுத்து ராமின் உயிரை பீம் காப்பாற்றுகிறார்.
ஒரு கட்டத்தில் தனது உண்மையான பெயரை ஜூனியர் என்டிஆர் சொல்ல போலீஸ் அதிகாரி ராம் சரண் அவரை பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
பீமை கைது செய்கிறார் ராம்சரண் சவுக்கடி கொடுக்கும்போது பீம் பாடும் சுதந்திர பாடல் ரசிகர்களால் ஆரவாரமாக வரவேற்கப்படுகிறது.
ராம்சரணின் அப்பா அஜய் தேவ்கனின் பிளாஷ்பேக் காட்சிகள், சமுத்திரகனி காட்சி, ஆலியா பட்டின் சில சாகசங்கள் நன்றாக உள்ளது.
இறுதியில் ராமும்-பீமும் இணைந்து ஆங்கிலேயர்களை பந்தாடுவது நல்ல ட்விஸ்ட் .
இயக்குநர் ராஜமெளலியின் இயக்கம், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடிப்பு அசத்துகிறது.
ராம்சரண், ஜூனியர் என்டிஆரை தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பெரிய முக்கியத்துவம் இல்லாதது பலகீனம்.
ஆர்.ஆர்.ஆர். பிரம்மாண்ட படைப்பு. ரசிகர்கள் தாராளமாக தியேட்டருக்கு சென்று ஒரு முறை பார்க்கலாம்.