Tap to Read ➤

நாயகன் பட நாயகி, முன்னனி நடிகர்களின் தாய் நடிகை சரண்யா

நாயகனில் அறிமுகமாகி பின்னர் முன்னனி நாயகர்களுக்கு தாயாக நடித்து பல விருதுகளை வென்ற சரண்யாவுக்கு இன்று பிறந்த நாள்
Filmibeat Tamil
நாயகன் பட நாயகி, முன்னனி நடிகர்களின் தாய் நடிகை சரண்யா
மணி ரத்னம், கமல் என்கிற ஆளுமைகள் இணைந்த நாயகன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி திரும்பிப்பார்க்க வைத்தவர் சரண்யா.
மலையாளத்தில் பிரபல இயக்குநர் பி.ராஜ்-ன் மகள் சரண்யா. கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்தவர்.
நாயகன் படத்திற்கு பின்னர் பிரபுவுடன் மனசுக்குள் மத்தாப்பு, கார்த்திக்குடன் என் ஜீவன் பாடுது போன்ற படங்களில் நடித்தார்.
அதன்பின் இயக்குநர் ராஜசேகரை மணந்தார். ஆனால் அவர்களது மணவாழ்க்கையில் முறிவு ஏற்பட்டது.
அதன் பின்னர் தொடர்ச்சியாக நடித்தாலும் அஞ்சலி, சீவலப்பேரி பாண்டி, பசும்பொன் போன்ற படங்கள் அவருக்கு பெயர் வாங்கித்தந்தது.
பசும்பொன் படத்தில் நடித்தபோது பொன்வண்ணனை மணந்தார். இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
2005 ஆம் ஆண்டு சரண்யாவுக்கு பொன்னான ஆண்டு எனலாம். அவர் தாயாராக நடித்த ராம், தவமாய் தவமிருந்து, எம்மகன் படங்கள் நன்றாக ஓடி அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.
அதன் பின்னர் சரண்யா தாயார் வேடத்துக்கு பொருத்தமான நடிகையாக மாறினார். 2006 ஆம் ஆண்டு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தமிழக அரசு விருது கிடைத்தது.
2010 ஆம் ஆண்டு களவாணி படத்தில் விமல் தாயாராக ஆடிப்போய் ஆவணி வந்தால் வசனம் பேசியே சிறந்த குணச்சித்திர நடிகை விருதைப்பெற்றார்.
2011 ஆம் ஆண்டு தென் மேற்கு பருவக்காற்று படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
2017 ஆம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தாயாராக வேலையில்லா மகனை பரிவுடன் பார்த்துக்கொள்ளும் தாயாராக நடித்து பெயர் வாங்கினார்.
2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் ஜுங்கா படத்திலும், நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்தார்.
2019 ஆம் ஆண்டு நானியுடன் தெலுங்கில் கேங் லீடர், களவாணி -2 ஆகிய படங்களில் நடித்தார்.
2021 ஆம் ஆண்டு ஜெயம் ரவியுடன் பூமி, அர்ஜுனுடன் மஹா சமுத்திரம், சத்யராஜ், சசிகுமாருடன் எம்ஜிஆர் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
2022 ஆம் ஆண்டு சத்யராஜுடன் சூர்யாவின் தாயாராக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு படங்கள் வெளிவர உள்ளன.