Tap to Read ➤

சத்யராஜ் முத்திரை பதித்த படங்கள்..பிறந்த நாளில் ஒரு அலசல்

Sathyaraj Stamped Images..An Analysis On His Birthday நடிகர் சத்யராஜ் வில்லனாக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர், தற்போது பல கேரக்டர்கள் செய்து வருகிறார்.
Filmibeat Tamil
சட்டம் என் கையில் படத்தில் சிறு வேடத்தில் எஸ்.பாஸ் வில்லனாக அறிமுகமான சத்யராஜ் பெரிதாக பேசப்படவில்லை, நூறாவது நாள் படத்தில் மொட்டை அடித்து வில்லனாக நடித்ததன் மூலம் திரும்பி பார்க்க வைத்தார்
தொடர்ந்து 24 மணி நேரத்தில் என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே என அமைதியான வில்லனாக வந்து அசத்தினார். சாவியில் வில்லன்&ஹீரோ கலந்த வேஷம்.
பின்னர் மணிரத்னத்தின் பகல் நிலவு படத்தில் பிரதான வில்லன் வேடம், கமல் ரஜினியுடன் வில்லன் வேடம் என கலக்கினார். கலக்கலான நூறாவது நாள் மொட்டை வில்லன் வேடம்.
ஆனால் அவருக்கு பெயர் வாங்கித்தந்த படம் என்னம்ம கண்ணு, தகிடு எங்க தகிடு, தகிடு என்று பேசிய காக்கிச் சட்டை பட வசனம் தான்.
. விக்ரம், மிஸ்டர் பாரத் இரண்டிலும் பிரதான வில்லன். மலேஷிய வாசுதேவனுடன் இணைந்து முதல்வசந்தம் படத்தில் அசத்தல் வில்லனாக நடித்தார்.
கடலோர கவிதைகள் படத்தில் ஹீரோவாக அறிமுகம். புதுமுகம் ரேகா அறிமுகமான படம். பாடல்கள் அத்தனையும் அருமை, சின்னப்பதாஸாக இப்படத்தில் அறிமுகமானார்.
அடுத்து ஹீரோவாக சின்னதம்பி பெரியதம்பி, மக்கள் என் பக்கம், கமல்ஹாசனின் முற்றிலும் புதுமையான கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்திலும் நடித்தார்.
அண்ணா நகர் முதல் தெரு பேர் வாங்கித்தந்த படமானாலும், தாய்நாடு படத்தில் டி.எம்.எஸின் 5 பாடல்களுடன் சத்யராஜ் நடித்த பாணி நன்றாக ரசிக்கப்பட்டது.
1990 களில் தொடர்ந்து முன்னணி நடிகராக பல படங்களில் ஹீரோவாக சத்யராஜ் நடித்தார். அதில் குஷ்புவுடன் நடித்த நடிகன் என்கிற படமும், ரிக்‌ஷா மாமா, மல்லுவேட்டி மைனர் உள்ளிட்ட படங்களும் பேசப்பட்டது.
. காவல் அதிகாரிகளாக சிவாஜி, ரஜினி, கமல், விஜய்காந்த் என அனைவரும் நடித்த நிலையில் சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் பேர் சொல்லும் படமாக அமைந்தது.
சத்யராஜ் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை படம் மணிவண்ணன் இயக்கத்தில் அவருடன் இணைந்து அமாவாசை, நாகராஜ சோழனாக நடித்த அமைதிப்படை. அரசியல் நையாண்டிக்கு இன்றும் இந்தப்படமே எடுத்துக்காட்டப்படுகிறது.
சத்யராஜ் நடித்த பல படங்கள் இருந்தாலும் ஹீரோ வேஷத்தில் பேசப்பட்ட படங்களில் பெரியார் படமும், தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு படமும் அவரது நடிப்புக்குச் சான்று.
குணச்சித்திர வேடத்துக்கு மாறியபின் சத்யராஜ் நடிப்பில் நண்பன் படத்தில் கல்லூரி முதல்வர் வைரஸ் பாத்திரம், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் கதாநாயகியின் அப்பா பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
சத்யராஜை பான் இந்தியா நடிகராக மாற்றிய படம் பாகுபலி கட்டப்பா வேடம், முதல் பாகம் முடிவில் கதாநாயகனை கொன்று பேசுபொருளானார் சத்யராஜ், இரண்டாம் பாகத்தில் அவரது பாத்திரம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நகைச்சுவை சத்யராஜுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி, அல்வாவையும் சத்யராஜையும் பிரிக்க முடியாது. 50 வயதிலும் அல்வா கொடுத்து வசமாக சிக்கும் வீட்ல விசேஷம் நகைச்சுவை படம் சமீபத்தில் வெளியானது.