Tap to Read ➤

SK-வின் டான் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது

நடிகர் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா நடிப்பில் மே 13ல் வெளியாகும் டான் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது, இப்படம் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளது
இயக்குனர் சிபி இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையில் உருவாகியுள்ள திரைப்படம், டான்.
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சூரி என பலர் நடித்திருக்கும் இப்படம் விரைவில் மே 13ல் வெளியாகிறது.
இப்படத்தினை உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது.
இப்படம் 2 மணி நேரம் 40 நிமிடங்களில் உருவாகி, 'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது.
டான் திரைப்படத்தின் டிரைலர், இன்று 2022 மே 6ல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான வசனங்கள் மற்றும் கலகலப்பான காட்சிகளோடு இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் ரசிகர்கள் இப்படத்தின் ட்ரைலரை கொண்டாடி வருகின்றனர்.
டான் படத்தின் டிரைலர்
டிரைலர் வீடியோ