Tap to Read ➤

சிவகார்திகேயனின் ‘டான்’ மூவி மினி விமர்சனம்

Sivakarthikeyan's 'DON' movie mini review
Filmibeat Tamil
சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகியுள்ள டான் எப்படி உள்ளது இளம் ரசிகர்கள், குடும்பத்தினரை கவர்ந்துள்ளதா பார்ப்போம்.
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள டான் திரைப்படம் வெளியாகி உள்ளது.
அப்பாவின் டார்ச்சரால் இன்ஜினியரிங் சேரும் சிவகார்த்திகேயன் கடைசியில் என்ன ஆனார் என்கிற கதையை செம ஜாலியாகவும் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையை சுவைபட சொல்லி இருக்கும் டான் பாஸா, ஃபெயிலா பார்ப்போம்.
சிவகார்த்திகேயனின் டான் டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ள சூழலில் அந்த மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள சிவகார்த்திகேயன் உள்ளதை டான் படத்தை பார்த்தாலே தெரிகிறது.
ஆக்‌ஷன் டானாக இப்போதைக்கு நடித்தால் செட் ஆகாது என்பதை உணர்ந்து கொண்டு தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தையும் கதைகளையும் அழகாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கிராமத்தில் இருக்கும் அப்பா சமுத்திரகனிக்கு பெண் குழந்தை மீது ஆசை ஆனால் ஆண் குழந்தை சிவகார்த்திகேயன் பிறக்க மகன் மீது வெறுப்பைக் கொட்டும் பாத்திரம்.
சிவகார்த்திகேயனின் பள்ளி மற்றும் கல்லூரி போர்ஷன்களை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அழகாக படமாக்கி உள்ளார். அவரது காமெடிக்கான ஸ்கோப்பை இயக்குநர் தாராளமாக கொடுத்துள்ளார்.
பள்ளி பருவத்தில் இருந்தே நாயகி பிரியங்கா மோகன் உடன் காதல் பின்னர் ஒரு சிறிய பிரேக்கப் அதன் பின்னர் மீண்டும் கல்லூரியில் காதல் மலர்வது என ரொமான்டிக் சிவகார்த்திகேயனும் சிக்ஸர் அடித்துள்ளார்.
கல்லூரியில் ஸ்ட்ரிக்ட்டான ஆசிரியர் பூமிநாதனாக வரும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் லாஸ்ட் பென்ச் ஸ்டூடன் சிவகார்த்திகேயனுக்கும் நடக்கும் மோதல்கள் எதார்த்தம் இல்லை என்றாலும் இளைஞர்களை ரசிக்க வைத்துள்ளது.
ஒரு கட்டத்தில் எஸ்.ஜே. சூர்யாவை கல்லூரியில் இருந்து வெளியேற்ற சிவகார்த்திகேயன் போடும் பிளான் இன்ஜினியரிங்கில் ஆர்வம் இல்லாதவர் எப்படி இதையெல்லாம் செய்தார் என்கிற கேள்வியை எழுப்புகிறது.
கல்லூரியில் காமெடி கலாட்டாவிற்கு சிவாங்கி, பால சரவணன், ஆர்ஜே விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் என அனைவரும் ஸ்கோர் செய்கின்றனர்.
அதே நேரத்தில் கிராமத்தில் தனது நண்பனாக வரும் சூரியுடன் சிவகார்த்திகேயன் செய்யும் அலப்பறைகள் வேற லெவல். அதிலும், ஒரு காட்சியில் சூரியை அப்பாவாக அழைத்து வரும் காட்சியில் காமெடி பக்காவாக வொர்க்கவுட் ஆகி உள்ளது.
சிவகார்த்திகேயன் பிளான் பண்ணி வெளியே அனுப்பிய எஸ்.ஜே. சூர்யா மீண்டும் அதே பள்ளிக்கு பிரின்ஸிபாலாக வந்து அவரை எப்படி பழி வாங்க துடிக்கிறார் என்பதும், சிவகார்த்திகேயன் கடைசியில் எப்படி இயக்குநர் ஆனார் என்பதுமே டான் திரைப்படத்தின் கதை.
இதை முழுக்க முழுக்க காமெடி கலந்து பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களால் மாணவர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை கொஞ்சம் தொட்டுக் கொண்டு டான் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் .
படத்தின் பிளஸ் என்று பார்த்தால் இயக்குநரின் மேக்கிங் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பு பெரிய பலமாக உள்ளது. தியேட்டர்களில் செம ஜாலியாக இளைஞர்கள் இந்த படத்தை கொண்டாடுவார்கள்.
அனிருத்தின் இசையில் பாடல்கள் எல்லாமே பக்கா.. அதிலும் அந்த பே பாடல் தாஜ்மகாலில் அவ்வளவு அழகாக படமாக்கப்பட்டு இருப்பது கூடுதல் பிளஸ்.
கே.எம். பாஸ்கரனின் ஒளிப்பதிவு, நாகூரான் ராமசந்திரனின் எடிட்டிங் எல்லாமே படத்திற்கு ரிச் வேல்யூவை கொடுத்துள்ளது. ஜலபுல ஜங் பாடலில் நடனத்தில் பின்னி எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அப்பா சமுத்திரகனியின் போர்ஷன் இரண்டாம் பாதியில் ஓவர் எமோஷனலாக வந்து நிற்பது இரண்டாம் பாதிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
அப்பா, அம்மா, ஆசிரியர் கண்டிப்புக்கு பின்னால் ஒரு பெரிய அர்த்தம் இருக்கும். அதை மதித்தால் வாழ்வில் முன்னேறலாம் என்பதை டான் படத்தின் மூலம் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பதிவு செய்துள்ளார்.