Tap to Read ➤

பிரபல தெலுங்கு நடிகருக்காக 2 மொழிகளில் சிம்பு பாடிய பாடல்

தனது தனித்திறமையால் திரையுலகில் முத்திரை பதித்து வரும் நடிகர் சிலம்பரசன் வாரியர் படத்திற்காக தமிழ் தெலுங்கு மொழிகளில் நடிகர் ராம் பொதினேனிக்காக பின்னணி பாடியுள்ளார்.
Filmibeat Tamil
நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 1984 ஆம் ஆண்டு 6 மாத கைக்குழந்தையாக இருந்தபோதே அவரை தந்தை டி.ராஜேந்தர் அறிமுகப்படுத்தினர்
நடிப்புத்தவிர இசை கருவிகளை வாசிப்பது, பின்னனி பாடுவது, படம் இயக்குவது, திரைக்கதை, டான்ஸ் என பன்முகத்திறமைக் கொண்டவர் சிம்பு. இதில் மற்ற நடிகர்களுக்காகவும் சிம்பு பாடியுள்ளார்
தமிழ் திரையுலகில் சந்திரபாபு, கமல்ஹாசனுக்கு பின் விஜய், தனுஷ், சிம்பு மூவரும் நடிப்பைத்தாண்டி பின்னனி பாடுவதிலும் வல்லவர்கள். மூவருமே மற்ற நடிகர்களுக்காகவும் பாடியுள்ளனர்
நடிகர் சிம்பு தான் வாங்கும் சம்பளம் முழுவதையும் தாயார் உஷாவிடம் கொடுத்து விடுவாராம். இதுபோன்ற பின்னனி பாடுவது, தனி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது போன்றவற்றில் வரும் வருமானத்தைத்தான் தனக்காக செலவழிப்பாராம்
சிலம்பரசன் இதுதவிர ஆஸ்கர் விருதை அள்ளிய ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் கதாநாயகனுக்காக பின்னனி குரலும் கொடுத்துள்ளார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வெற்றிகரமான தொகுப்பாளராகவும் தன்னை நிரூபித்துள்ளார்
சிம்பு 1989 ஆம் ஆண்டு தனது 5 ஆம் வயதில் தந்தை டி.ஆரின் படத்தில் பின்னனி பாட ஆரம்பித்தார். இதுவரை 123 பாடல்களை பாடியுள்ளார். அதில் பெரும்பாலானவை மற்றவர்களுக்கும் பாடியுள்ளார். பல பாடல்கள் ஹிட் ஆகியுள்ளது
சமீபத்தில் சிம்புவின் மாநாடு படம் சிறப்பாக ஓடியது, அதனுடன் போட்டி போட்ட எஃப்.ஐ.ஆர் படத்தில் ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார்
இது தவிர தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளிவர உள்ள வாரியர் படத்தில் டிஎஸ்பி இசையில் புல்லட் எனும் பாடலை இரு மொழிகளிலும் சிம்புவே பாடியுள்ளார்
இந்தப்படத்தில் பிரபல தெலுங்கு இளம் நடிகர் ராம் பொதினேனி ஹீரோவாகவும், க்ரீதி ஷெட்டி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். லிங்குசாமி படத்தை இயக்கியுள்ளார்
இந்தப்பாடல் இன்று வெளியானது. அதில் சிம்பு பின்னனி பாடுவது போன்றும், ஹீரோவுடன் இருப்பது போன்றும் காட்சிகள் உள்ளது
ஹீரோ, ஹீரோயின் பாடும் வண்ணமயமான காட்சிகளும் படத்தில் உள்ளது