Tap to Read ➤

கோலிவுட்டில் மெல்ல காலூன்றும் சன்னிலியோன்.. புதிய தகவல்கள்

பிரபல ஹாலிவுட் நடிகை சன்னி லியோன் கோலிவுட்டிலும் கால் பதிக்க தொடங்கியுள்ளார். இரண்டு தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார்.
Filmibeat Tamil
கனடா நாட்டில் பிறந்தவர் சன்னி லியோன். கரெஞ்சித் கவுர் வோரா என்கிற இயற்பெயர். பஞ்சாபியரான இவர் பிறந்தது கனடா என்பதால் கனடா குடியுரிமை பெற்றவர்
கனடாவில் திரைப்பட நடிகை, தொழிலதிபராக இருந்துள்ளார். ஆனால் இவர் அதிகமாக உலக அளவில் பிரபலமானது பாலுணர்வு படங்கள் மூலமாகத்தான்
இந்தியாவில் பாலிவுட்டில் 2012-ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் - 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக சன்னிலியோன் அறிமுகமானார். சன்னிலியோன் ஆபாச படங்களில் நடித்தவர் என்பதால் அவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என அப்போது எதிர்ப்பு கிளம்பியது
தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த சன்னிலியோன் தமிழில் முதன் முதலில் 2014 ஆம் ஆண்டு வடகறி படத்தில் கேமியோ ரோல் செய்ததன் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தார்
1981 ஆம் ஆண்டு பிறந்த சன்னி லியோனுக்கு தற்போது 41 வயதாகிறது. இவருக்கு ஒரு சகோதரன் இருக்கிறார். பஞ்சாபை சேர்ந்த தாய் தந்தையருக்கு பிறந்தவர்
சிறுவயதில் குடும்பத்தில் வறுமை காரணமாக துணிச்சலாக டாம் பாய்போல் திரிந்தவர் சன்னிலியோன். வறுமை காரணமாக மாடலிங் தொழிலுக்கு சென்றார்
முதல் மாடலிங் ஷூட் உள்ளாடைகள் சம்பந்தப்பட்ட விளம்பரம். அதன் பின்னர் பார்ன் படங்களில் வாய்ப்பு கிடைக்க அதிக பணம் கிடைத்ததால் அதில் நடிக்கிறார். இது பெற்றோருக்கு தெரியாது
ஒரு கட்டத்தில் கனடாவின் பிரபல பார்ன் இதழான பெண்ட் ஹவுஸ் அட்டைப்படத்தில் அவரது கிளாமர் புகைப்படம் வெளியாக பெரும்புகழ் கிடைக்கிறது. ரசிகர் கூட்டம் பெருகுகிறது
மறுபுறம் சீக்கிய மதத்தினை இழிவு படுத்தியதாக இவர்மீது விமர்சனம் எழுந்தது. சன்னி லியோன் என்றால் பார்ன் ஸ்டார் என உலகப்புகழ் பெற்றார்
சன்னி லியோன் அமெரிக்கரான டேனியல் வேபர் என்பவரை 2008 ஆண்டு சந்தித்தார். 2011 ஆம் ஆண்டு சீக்கிய முறைப்படி திருமணம் செய்தனர்
இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். இரட்டை ஆண் குழந்தைகள் வாடகைத்தாய் மூலம் பெற்றனர். ஒரு குழந்தையை தத்தெடுத்தனர். 3 குழந்தைகள் கணவர் என அமைதியான வாழ்க்கை வாழ்கிறார் லியோன்
சன்னி லியோன் தொழிலதிபர், மாடலிங், பார்ன் ஸ்டார், நடிகை, பிராண்ட் அம்பாசிடர், எம்டிவி புகழ், பாலிவுட் நடிகை, மோலிவுட், இப்ப கோலிவுட்டிலும் கால் பதிக்கிறார்
2014 ஆம் ஆண்டு பாலிவுட் படத்தில் நடித்ததன் மூலம் இந்தியாவுக்குள் சன்னிலியோன் நுழைந்தார். 2021 மலையாளப்படத்தில் நடித்தார், தமிழில் ஓ மை கோஸ்ட் என்கிற படத்தில் பேயாக வருகிறார். இந்தப்படத்தில் ஜி.பி.முத்துவும் நடிக்கிறார்
இந்நிலையில் மற்றொரு தீ இவன் என்கிற தமிழ் படத்திலும் சன்னிலியோன் நடிக்கிறார். இதற்காக அவர் இரண்டாவது முறையாக சென்னைக்கு நேற்று வந்தார்
சன்னி லியோனுக்கு பிடித்த நடிகர் யார் என நேற்று அவர் மேடையில் பேசும்போது கூறியுள்ளார். வேறு யாரைப்பிடிக்கும் நம்ம சூப்பர் ஸ்டார் அது