Tap to Read ➤

இணையத்துல வைரலாகும் சூர்யா - ஜோதிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

ரீல் & ரியல் ஜோடியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சூர்யா - ஜோதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் & தகவல்கள் இங்கு உள்ளன.
சூர்யா - ஜோதிகா, தமிழ் சினிமாவில் பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ள பிரபலங்கள் ஆவார்.
இவர்களது முன்னணி கதாபாத்திரங்களில் சில்லுனு ஒரு காதல், காக்க காக்க, பூவெல்லாம் கேட்டுப்பார், மாயாவி, பேரழகன் என பல வெற்றி படங்கள் உருவாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று பிரபலமாகியுள்ளது.
செப்டம்பர் 11, 2006 அன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ஜொலித்த காதல் ஜோடி சூர்யா- ஜோதிகா இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
ஜோதிகா இவர்களது காதல் வாழ்க்கையை பற்றி "சூர்யா என் நண்பராக இருந்ததால்தான் நல்ல காதலராக, கணவராக இருக்க முடிகிறது. கோடி நன்றி சூர்யா!" என மேடையில் புகழ்ந்து பேசியுள்ளார்.
தற்போது இருவரும் இணைந்து தமிழ் சினிமாவில் '2டி என்டர்டைன்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல வெற்றி படங்களை தயாரித்து வருகின்றனர்.
சூர்யா - ஜோதிகா இருவரும் இணைந்து 'அகரம் அறக்கட்டளை' மூலம் பல நன்மையான செயல்களை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு சென்ற சூர்யா - ஜோதிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இணையதளங்களில் ட்ரெண்டிங்-ல் உள்ளது.