Tap to Read ➤

தமிழ் சினிமாவில் நாவல் நாடகங்களை தழுவி எடுக்கப்பட்ட படங்கள்

தமிழ் சினிமாவில் நாவல்/ நாடகங்களை தழுவி எடுக்கப்பட்டு பேசப்பட்ட எவர் கிரீன் படங்கள் இன்றும் ரசிக்கப்படுகிறது
Filmibeat Tamil
தில்லானா மோகனாம்பாள் இந்தப்படம் கொத்தமங்கலம் சுப்புஎழுதிய நாவல் அடிப்படையில் வந்து வெள்ளிவிழா கண்ட படம். சிவாஜி பத்மினி ஜோடி, பாடல்களுக்காக பேசப்பட்டது
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கி லைகா எடுத்த பிரம்மாண்ட படம். தமிழ் திரையில் சூப்பர் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்தபடம்
தங்கப்பதக்கம்: இயக்குநர் மகேந்திரன் எழுதிய மேடை நாடகம் வெற்றிகரமாக வரவேற்கப்பட்ட நாடகத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்க பி.மாதவன் இயக்கியிருப்பார். இதில் சிவாஜி கணேசன், ஸ்ரீகாந்த், கே.ஆர்.விஜயா நடித்தனர்
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை திரைப்படம் ’லாக்கப்’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு தேசிய விருதை அள்ளியது குறிப்பிடத்தக்கது
மகரிஷி எழுதிய நாவல். குமுதம் குழுமத்தில் வெளிவந்த மாலைமதி எனும் பத்திரிகையில் முழு நாவலாக வெளி வந்தது. பின்னர் இது திரைப்படமாக "புவனா ஒரு கேள்விக்குறி" என வெளியானது. ரஜினி, சிவகுமார் நடித்த படம்
சாந்தி நிலையம்: பிரபல ஆங்கில பெண் நாவலாசிரியர் சார்லெட் ப்ராண்ட் எழுதிய ஜெனி எரி என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். இந்த நாவலில் பல பாகங்கள் உண்டு. அதில் ஒரு பாகத்தை தழுவி உருவானதுதான் சாந்தி நிலையம்.
அசுரன்: எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் அசுரன். இந்தப்படத்தில் நடிப்பு, இயக்கத்துக்காக தனுஷும், வெற்றிமாறனும் தேசிய விருது பெற்றனர்