Tap to Read ➤

நடிப்புக்காக உடலை வருத்தும் தமிழ் நடிகர்கள்

அன்று முதல் இன்று வரை !!
Sidhanathan K
திரைப்படங்களில் நடிப்பதைத்தாண்டி தன்னுடைய கேரக்டருக்காக உடலை வருத்திக்கொண்டு நடித்த தமிழ் நடிகர்கள் அந்த காலம் முதல் இன்று வரை பலர் உள்ளனர்.
சினிமாவில் சாதித்த நடிகர்களில் பெயர் சொல்லும் ரோலை செய்தவர்கள் எப்போதும் பேசப்பட்டார்கள். வசூல் சக்ரவர்த்தியாக இருந்து என்ன பயன், பர்ஃபாமன்ஸ் இல்லையேப்பான்னு வடிவேலு பாணியில் தான் கேட்பார்கள்.
உடலை வருத்திக்கொள்வது என்பதில் இரண்டு ரகம் உண்டு. ஒன்று அந்த வேடத்திற்காக போடப்படும் மேக்கப், வேடத்திற்காக உடல் எடையைக் கூட்டுவது அல்லது குறைப்பது என்பது ஒரு வகை.
முக்கியமானவர் ஜெமினி கணேசன். 1955 ஆம் ஆண்டிலேயே கணவனே கண் கண்ட தேய்வம் படத்தில் கூன் விழுந்த அரூபியாக நடித்திருப்பார்.
எம்.ஆர்.ராதா ரத்தக்கண்ணீர் படத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் வேடத்தில் கூன் விழுந்த முதுகுடன் கைகளை தூக்கியபடி படம் முழுவதும் நடித்திருப்பார்.
அடுத்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நம்பியார் இரண்டாவது ஜென்மம் எடுத்த ஹீரோயினை பழிவாங்க அலையும் வயதான ஜமீந்தாராக வயதான கெட்டப்பில் முகம் சுருங்கிய கூன் விழுந்த வேடத்தில் நடித்திருப்பார்.
உலகம் சுற்றும் வாலிபனின் துருத்திய பல்லுடன் கோரமாக எம்ஜிஆருடன் சண்டை போடுவார் நம்பியார்.
அடுத்து சிவாஜி கணேசன் அவரது பல படங்களில் அப்பராக வயதான வேடத்தில், பாபு படத்தில் வயதான உடல் நலிவுற்ற முதியவர் வேடத்தில் நடித்திருப்பார்.
இன்றைய இளம் தலைமுறை நடிகரான சூர்யா பேரழகன் படத்தில் படம் முழுவதும் துருத்திக்கொண்டிருக்கும் பல்லுடன் கூன் விழுந்த இளைஞராக நடித்திருப்பார்.
படம் முழுவதும் திருநங்கையாக பெண் வேடத்தில் நடித்து கலக்கியிருப்பார் விஜய் சேதுபதி.
ரெமோ படம் முழுவதும் காதலியை கவர பெண் நர்ஸ் வேடமிட்டு நடித்திருப்பார் சிவகார்த்திகேயன். பெண்களே தோற்றுப்போகும் அளவுக்கு அழகு.
வேடங்களில் வித்தியாசத்தை காட்ட உடலை வருத்திய இன்னொரு நடிகர் விக்ரம். ஐ படத்தில் இவர் அரூபியாக கூன் விழுந்தவராக நடித்திருப்பார்.
எண்ணிக்கையில் அடங்காத படங்களில் வித்தியாச கெட்டப்புகளில் அசத்தியவர் கமல்ஹாசன் எனலாம். அப்பு, அவ்வை சண்முகி, தாசாவதார மூதாட்டி உள்ளிட்ட 10 வேடங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இது தவிர உடல் எடையை கூட்டி குறைத்த நடிகர்கள் என்றால் சிவாஜி கணேசனை சொல்லலாம். அவர் வேடத்துக்காக கூட்டவில்லை என்றாலும் அவர் நடித்த காலக்கட்டத்தில் திடீர் என உடல் மெலிந்து இருப்பார், திடீரென உடல் எடை கூடுவார்.
கேரக்டருக்காக உடல் எடையை கூட்டி குறைத்து நடித்தவர் என்றால் அதிலும் முதலில் வருபவர் உலக நாயகன் தான். சத்யா தொடங்கி ஆளவந்தான் வரை பல படங்களை சொல்லலாம்.
ஆளவந்தானில் உடல் எடையை கூட்டுவதற்கு முன் ஒரு கேரக்டரை முடித்து கொடுத்துவிட்டு அதன் பின் உடல் எடையை கூட்டி இன்னொரு கேரக்டரை நடித்து கொடுத்தார்.
அடுத்து உடல் எடையை கடுமையாக குறைத்து நடித்தவர் என்றால் நடிகர் அஜித்தை சொல்லலாம். இவர் திருப்பதி படத்துக்காக அநியாயத்துக்கு உடல் எடையை குறைத்துக்கொண்டு நடிக்க வந்தார்.
இதேபோல் உடல் எடையை கடுமையாக குறைத்தவர் சிம்பு. மாநாடு படத்துக்கு முன் உடல் பெருத்து கன்னத்து சதைகள் உப்பி காட்சி அளித்த சிம்பு அந்தப்படத்தில் அடையாளம் காண முடியாத அளவுக்கு மெலிந்து நடித்திருந்தார்.
அதையெல்லாம் துக்கி சாப்பிடும் வகையில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் 21 வயது இளைஞர் போன்ற தோற்றத்துடன் உடலை மெலிய வைத்து நடித்துள்ளார்.