Tap to Read ➤

மினி ரிவ்யூ...'டாணாகாரன்' சாதிப்பாரா

விக்ரம் பிரபு டாணாக்காரன் மினி விமர்சனம்.. சாதிப்பாரா 'டாணாகாரன்'
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், புதுமுக இயக்குநர் தமிழ் எழுத்து இயக்கத்தில் டாணாக்காரன் படம் ஓடிடி தளத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
போலீஸாவதற்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா? என நம்மை சிந்திக்க வைக்கும் அளவுக்கு டாணாக்காரன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
விக்ரம் பிரபு, லால், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் போலீஸாகவே வாழ்ந்துள்ளார்கள். அவர்களை கதாபாத்திரத்திலிருந்து பிரித்து பார்க்க முடியவில்லை.
ஆரம்பத்தில் முன் கதையாக பிரிட்டீஷ் கால நடைமுறை காவல்துறையில் இன்றும் உள்ளதை சொல்கிறார்கள், அதன் பின் படம் முதல் காட்சியிலிருந்தே விறுவிறுப்பாக நகர்கிறது.
படம் 1997 ஆம் ஆண்டு நடப்பதாக உண்மைச் சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது, இயக்குநர் போலீஸாக இருந்தவர் என்பதால் மெனக்கிட்டது தெரிகிறது.
படத்தில் பல இடங்களில் வசனம் கூர்முனையாக உள்ளது. ஆனால் சில இடங்களில் ஹீரோவை காரல்மார்க்ஸ் புத்தகம் படிக்க வைத்திருப்பது எல்லாம் ஓவர் ரகமாக தெரிகிறது.
போலீஸ் மக்களிடம் புலி அதிகாரிகள் முன்னால் எலி, அடிமை மனோபாவத்துடன் வாழ வேண்டும் என்பதை இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
ஈஸ்வர மூர்த்தி கேரக்டரில் பயிற்சியாளராக லால் மிரட்டுகிறார். பல நேரங்களில் படம் பார்ப்பவர்களே பயிற்சியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்.
அதற்கு நேர் மாறான கேரக்டருடன் பயிற்சியாளராக வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர், அவமானப்படுத்தப்பட்டு பதவி உயர்வு மறுக்கப்பட்டு புழுங்கும் கேரக்டர் அளவாக நிறைவாக நடித்துள்ளார்.
பாடம் நடத்தவரும் நேர்மையான இன்ஸ்பெக்டராக வரும் போஸ் வெங்கட் போலீஸாரின் பிரச்சினைகள் குறித்து பேசுகிறார், அந்த கேரக்டர் மூலம் சமநிலையை ஏற்படுத்த முனைகிறார் இயக்குநர்.
கதாநாயகி என்று அஞ்சலி நாயர் போலீஸாக சில காட்சிகள் வந்து போகிறார். ஒரு பாடல் கடைசியில் அவர் என்னவாகிறார் என்பது இல்லை.
போலீஸ் பயிற்சியில் எவ்வளவோ நல்ல விஷயங்களை சொல்லித்தரலாம் ஆனால் இப்படி அடித்து நொறுக்கி பயிற்சி மட்டுமே கொடுப்பது என்ன நியாயம் என ஹீரோ கேட்கும் காட்சி அருமை.
மொத்தத்தில் போலீஸ் பயிற்சிக்கல்லூரியில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் சில இடங்களில் சினிமாத்தனம் இருந்தாலும் தொய்வில்லாமல் கதை நகர்கிறது.
படத்தில் பாடல்கள் உள்ளது நம்புங்க என்பது போல் பாடலாக இல்லாமல் காட்சியுடன் நகர்கிறது அருமை. ஒளிப்பதிவாளர் மாதேஷின் கேமரா கண்கள் காட்சிக்கு காட்சி மிரட்டுகிறது. ஜிப்ரான் தான் யார் என்பதை நிரூபித்துள்ளார்.
மொத்தத்தில் வெற்றிமாறனின் சிஷ்யன் என்பதை தமிழ் நிரூபித்துள்ளார். இலகுவாக கதையை நகர்த்துவது, யதார்த்தமான காட்சிகள் என முதல் படத்திலேயே அசத்தியுள்ளார்.