Tap to Read ➤

காவலர் பயிற்சி பள்ளியில் டாணாக்காரன் திரையீடு...பாராட்டிய அதிகாரிகள்

போலீஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சியின் போது நடக்கும் கொடுமைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டாணாக்காரன் படம் போலீஸ் பயிற்சி கல்லூரியிலேயே திரையிடப்பட்டு பாராட்டு பெற்றது.
Filmibeat Tamil
போலீஸ் பயிற்சியை அடிப்படையாக வைத்து டாணாக்காரன் படம் சமீபத்தில் வெளியானது.
இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாகவும், லால், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் பயிற்சியாளராகவும் நடித்திருப்பார்கள்.
இதில் லால் கதாநாயகனுக்கு இணையாக கொடூரமான பயிற்சியாளராக நடித்திருப்பார். படம் முழுவதும் இவர் ஆதிக்கம் தான்.
எம்.எஸ்.பாஸ்கர் ஒரு பயிற்சியாளராக பழிவாங்கப்பட்டவராக நடித்திருப்பார். லால் கொடுக்கும் கொடூர தண்டனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் பாத்திரம்.
போலீஸ் பயிற்சிக்கல்லூரியில் பயிற்சிக்களம் கடினாமாகத்தான் இருக்கும் ஆனால் கொடூரமாகவும் இருக்கும் என்பதை இப்படம் வெளிச்சம் போட்டு காட்டியது.
இதைப்பார்த்த போலீஸார் மத்தியில் பெருத்த வரவேற்பு இருந்தது. தங்களது பயிற்சி காலத்தில் இவ்வாறு கஷ்டப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இயக்குநர் தமிழ் காவல்துறையில் இருந்ததால், தனது சொந்த அனுபவம், தான் கேட்ட மற்றவர்களின் அனுபவத்தை திரைக்கதையாக அமைத்து இயக்கியதாக தெரிவித்தார்.
டாணாக்காரன் படம் பெரும் வணிக நோக்க படங்களுடன் போட்டியிட முடியாமல் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனாலும் பலத்த வரவேற்பை பெற்றது.
டாணாக்காரன் படத்தைப்பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகன் விக்ரம் பிரபுவை அழைத்து பாராட்டினார்.
தற்போது இப்படத்தை காவலர் பயிற்சிக்கல்லூரியிலேயே திரையிட்டுள்ளார் இயக்குநர் புகழ். படத்தை காவலர் பயிற்சிக்கல்லூரியில் பயிலும் போலீஸார், அதிகாரிகள் பார்த்து தமிழை பாராட்டினர்.
மக்களின் ஆதரவுடன் டாணாக்காரன் தனது பயணத்தை ஓடிடி தளத்தில் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது.