Tap to Read ➤

சாணிக் காயிதம் படத்தின் டிரைலர் வெளியானது

கீர்த்தி சுரேஷ் - செல்வராகவன் நடிப்பில் உருவான சாணிக் காயிதம் படத்தின் டிரைலர் இன்று வெளியானது, இப்படம் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன.
இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள படம் சாணிக் காயிதம்.
சாணிக் காயிதம் படம் வரும் மே மாதம் 6ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியாக உள்ளது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'ராக்கி' படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது அவரது இயக்கத்தில் சாணிக் காயிதம் படம்  வெளியாகவுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே இந்தப் படத்தின் டீசர், டிரைலர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது
24 கொலைகள் செய்துள்ள ஒரு கொடூரமான கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். கொலைக்கு - கொலையே தண்டனை என ஒரு பழிவாங்கும் படமாக, இப்படம் உருவாகியுள்ளது
சாணிக் காயிதம் படத்தின் டிரைலர்
டிரைலர் வீடியோ