Tap to Read ➤

நெல்சனுக்கு ரஜினி கொடுத்த அட்வைஸ்

பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவில் இல்லாததால், தலைவர் 169 படத்தில் இருந்து நெல்சன் நீக்கப்பட்டு விட்டதாக வெளியான தகவல்கள் முடிவுக்கு வந்துள்ளது
விஜய்யின் பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்குகிறார் என்றதும் அவரை ஆஹா, ஓஹோ என பலரும் புகழ்ந்தனர்.
பீஸ்ட் ரிலீசாவதற்கு முன்பே ரஜினியின் 'தலைவர் 169' படத்தை நெல்சன் இயக்குகிறார் என்றதும் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லாமல் போனது.
பீஸ்ட் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு கொஞ்சும் சம்பந்தமே இல்லாமல் போனதால் தலைவர் 169 வாய்ப்பு நெல்சனை விட்டு போய் விட்டதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவியது.
பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு ரஜினி அப்செட்டாகி விட்டதாகவும், இதனால் தலைவர் 169 டைரக்டரை மாற்ற முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
நெல்சன் - ரஜினி - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் தான் தலைவர் 169 உருவாக போகிறது.
ஏற்ற, இறக்கம் என்பது சகஜம். ஒரு படத்தை வைத்து ஒருவர் இயக்கும் அனைத்து படங்களையும் முடிவு செய்து விட முடியாது என படக்குழு தரப்பில் இருந்த கூறப்படுகிறது.
ரஜினி, பீஸ்ட் படத்தை பார்த்து அப்செட் ஆனது உண்மை தானாம். அதற்காக டைரக்டரை மாற்றும் அளவிற்கு போகவில்லையாம். மாறாக நெல்சனிடம் கதையில் சில மாற்றங்களை செய்ய ஆலோசனை வழங்கி உள்ளாராம்.
மொத்தத்தில் தலைவர் 169 படத்தை நெல்சன் தான் இயக்க போகிறார் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை என்பது மட்டும் கன்ஃபார்ம்.