Tap to Read ➤

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் திரைக்கதையில் உருவாகிறது தலைவர் 169

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படமான 'தலைவர் 169' படத்தில் படக்குழு தகவல்கள் இங்கு உள்ளன.
அண்ணாத்த படத்திற்கு பின்னர் ரஜினி நடிக்கும் புதிய திரைப்படம் தான் 'தலைவர் 169'. இப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக தலைப்பு இன்னும் வெளியாகவில்லை.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தினை, சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2022 ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குனர் நெல்சன் இயக்கம் இப்படத்திற்கு இயக்குனர் மற்றும் நடிகருமான கே எஸ் ரவிக்குமார் திரைக்கதை எழுதியுள்ளார்.
தலைவர் 169 திரைப்படம் 2023-ம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது.
இத்திரைப்படத்தில் கன்னட சினிமா சூப்பர் ஸ்டார் திரு. ஷிவ ராஜ்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்
நடிகை பிரியங்கா மோகன் இப்படத்தில் ரஜினியின் மகள் கதாபாத்திரத்தில் நடிப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
புகழ் பெற்ற ஹிந்தி நடிகை ஐஸ்வர்யா ராய் இப்படத்தில் நடிக்கிறார், இவர் ரஜினியின் எந்திரன், 2.0 படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார், ரம்யா கிருஷ்ணன் - ரஜினி கூட்டணியில் உருவான படையப்பா திரைப்படம் இன்றும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படமாகும்.
தலைவர் 169 படத்தின் முழு தகவல்கள்
தகவல்கள்