Tap to Read ➤

தளபதி 66 - பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

தளபதி விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் நடந்துள்ளது. இப்படம் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராவார். இவரது ஒவ்வொரு படங்களும் வசூல் காலெக்ஷன், யூ-டியூப் ரெகார்ட் என பல்வேறு வகையில் பல சாதனைகளை படைத்து வருகிறது.
இவரது நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் 2021 ஜனவரி 13ல் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற படமாகும்.
நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக 'பீஸ்ட்' திரைப்படம் 2022 ஏப்ரல் 13ல் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்துள்ளது.
'தளபதி 66' விஜய்யின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 66வது திரைப்படமாகும்.
தளபதி 66 திரைப்படத்தில் நாயகியாக 'ராஷ்மிகா மந்தனா' நடிக்கவுள்ளார்.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தினை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் 'தமன்' இசையமைக்கிறார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இப்படத்தின் இயக்குனர் வம்சி தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி பிரமாண்ட ஹிட் ஆனா 'தோழா' படத்தினை இயக்கியவர்.
பெயரிடப்படாதா 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் 2022 ஏப்ரல் 06ல் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படம் நேரடியாக தமிழ் - தெலுங்கு என இரு மொழியில் உருவாகும் படமாகும்.