Tap to Read ➤

மரியாதை நிமிர்த்தமாக தெலுங்கானா முதல்வரை சந்தித்தார் தளபதி விஜய்

இன்று (18 மே 2022) மரியாதை நிமிர்த்தமாக தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர் - விஜய் சந்திப்பு நடந்துள்ளது. இதனை பற்றிய முழு விவரங்கள்
Sakthi Harinath M
பீஸ்ட் படடத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் தான் 'தளபதி 66'. இப்படம் நடிகர் விஜய்யின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 66வது படமாகும்.
இன்னும் இப்படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், 'தளபதி 66' என இப்படத்தினை அனைவரும் அழைக்கின்றனர்.
தளபதி 66 திரைப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய், இப்படத்தின் இயக்குனர் வம்சிஆகியோர் இன்று மரியாதை நிமிர்த்தமாக தெலுங்கானா முதல்வர் சந்திரா சேகர் ராவ் அவர்களை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
புகைப்படங்கள்