Tap to Read ➤

தி லெஜண்ட் இன்னொரு ’சிவாஜி’ படமா..சந்தேகிக்கும் நெட்டிசன்கள்

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்துள்ள ’தி லெஜன்ட்’ பட ட்ரெய்லர் பிரம்மாண்டமாக நேற்று வெளியானது. ட்ரெய்லர் காட்சிகள் ரஜினியின் சிவாஜி படம் போல் உள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.
சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சி தயாரித்து நடித்து வெளிவர உள்ள படம் தி லெஜன்ட். 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நேற்று பிரம்மாண்டமான விழாவில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
இந்தப்படத்தில் முக்கிய கதாநாயகி தவிர 10 கதா நாயகிகள் இடம்பெற்றுள்ளார்கள்.
பாடல்கள் எடுக்கப்பட்ட விதம், கலை, காட்சி அமைப்புகள், கோரியோகிராப், கேமரா, சண்டைக்காட்சிகள் அனைத்துமே மிகப்பெரிய நடிகர்களுக்கு உள்ளதுபோல் அமைந்துள்ளது.
ட்ரெய்லர் வெளியீட்டு விழாவையே பிரம்மாண்ட விழாவாக நடத்தியுள்ளார் அண்ணாச்சி. ஊடகங்கள், யூடியூபர்கள் மிகப்பெரிய நடிகர் நிகழ்ச்சியில் குவிவதுபோல் நெருக்கியடித்தனர்.
வெள்ளையப்பனை வாரி இரைத்தால் போதும் எப்படி வேண்டுமானாலும் புகழ நடிகைகளும், திரையுலகினரும் தயாராக இருக்கிறார்கள் என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
நடிகை லதா நான் திரையுலகிற்கு வந்து 50 வது ஆண்டில் அண்ணாச்சியுடன் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன் என்று சொன்னதை கேட்டு எம்ஜிஆருடன் நடித்ததைவிடவான்னு நெட்டிசன்கள் கேட்கின்றனர்.
அண்ணாச்சியின் தன்னம்பிக்கை மிகப்பெரியது. யாருடனும் நடிக்க மாட்டேன், தனி ஆளாகத்தான் நடிப்பேன், நல்ல இயக்குநர்கள் வந்தால் ஏற்பேன், படம் தயாரிப்பது தொடரும் என அறிவித்துள்ளார்.
படத்தின் ட்ரெய்லர், விஞ்ஞானி சரவணன் தனது ஊருக்கு நல்லது செய்ய வந்துள்ளதும், அவருக்கு ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் வில்லன் டீம்கள் தொல்லை கொடுப்பதும் என காட்சி உள்ளது.
பெரிய வில்லன் சுமன் வருவதும் இந்தப்படத்தை எங்கேயோ இதற்கு முன் பார்த்திருக்கிறோமோ என்று நினைக்கும்போது அட ஆமா இது அந்த படத்த ஞாபகப்படுத்துதில்லன்னு கேட்க தோணுது.
அதற்கு ஏற்றார்போல் வாஜி வாஜி வாஜின்னு சிவாஜி படத்தில் வரும் பாடல் ஸ்டைலில் ஒரு பாடல் அதே பாடலை ஞாபகப்படுத்துது.
என்ன செய்வது அண்ணாச்சியைன் ஆக்‌ஷன் கிங் ஆக்கியே தீருவோம்னு படக்குழு முடிவெடுத்து வேலை செய்யும்போது அங்க இங்க இதுபோல் ரிப்பீட்டு வரத்தான் செய்யும்.
பத்துவருஷத்துக்கு முன் பார்த்த பல காட்சிகள், பாடல்காட்சிகள் அப்படியே கண்முன் வந்து போகுது. ஒருவிஷயத்தை இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது பாராட்டியே தீர வேண்டும்.
அண்ணாச்சியின் விளம்பரப்படம் எப்படி பேசுமோ, அதேபோல் படத்திலும் கேமரா, கோரியோகிராப், ஸ்டண்ட் கலைஞர்கள் வேலை பக்காவாக இருக்கிறது.
அதற்கு ஏற்றாற்போல் ட்ரெய்லர் வீடியோவை 5 மில்லியன்பேர் பார்த்துள்ளதே அதற்கு சாட்சி. படத்தில் அண்ணாச்சியின் ஸ்டண்ட் வேற ரகம்.
படத்தில் மாநாடு படம் போல் ஸ்டுலில் ரொடேட் ஆகி அடிக்கும் காட்சியும் உண்டு.
அட படத்தில் மன்சூர் அலிகான் இருக்கிறார். அரசியல்வாதியாக நடித்துள்ளதாக தெரிகிறது.
படத்தில் யோகிபாபு, மயில்சாமி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
விவேக்குடன், நாசர் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். படத்தில் நாசர் விஞ்ஞானியாக வருவது போல் காட்சி உள்ளது. விவேக்கின் கடைசி படம் இது.
படத்தில் விவேக் சிவாஜி படத்தில் ரஜினியுடன் வருவதுபோல் அண்ணாச்சியுடன் படம் முழுவதும் ட்ராவல் பண்ணுகிறார். அவருடன் சச்சு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
படத்தில் முக்கியமான வில்லன்கள் நடித்துள்ளனர். மலையாள பட உலகின் முக்கிய வில்லனான ஹரீஷ் பெராடியும் இப்படத்தில் நடித்துள்ளார்.