Tap to Read ➤

பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து வீடியோ பாடல் வெளியானது

இன்று 2022 மே 09, நடிகர் விஜய் - பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'அரபிக் குத்து' வீடியோ பாடல் வெளியீடு
Sakthi Harinath M
தமிழ் சினிமாவின் 'தளபதி' விஜய் - பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பீஸ்ட் திரைப்படம், 2022 தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.
டார்க் காமெடி வண்ணத்தில் ஒரு திரில்லர் படமாக உருவாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம், வசூல் மழையில் பாக்ஸ் ஆபிஸ் வரிசைக்கு சென்றுள்ளது.
பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'அரபிக் குத்து' பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மிக பெரிய அளவில் பிரபலமானது.
அரபிக் குத்து பாடலில் நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் அட்டகாசமாக நடனமாடியுள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் இப்பாடலுக்கு பாடல் வரிகள் எழுத, அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி பாடியுள்ளனர்.

Your browser doesn't support HTML5 video.

அரபிக் குத்து பாடலின் வீடியோ
அரபிக் குத்து வீடியோ